ஆசிரியர் யாண்டும் ‘வேற்றுமைத்தொக்க’ சொல். 418 ‘உம்மைதொக்க’ சொல்.289 ‘உம்மை எஞ்சிய’ சொல்.223 ‘வினையின் தொகை’ சொல்.412 ‘பண்பின்தொகை’ சொல்.412, 416 ‘தொகுக்கும்வழித் தொகுத்தல்’ சொல்.403 எனக் குறைத்தல் பொருள்படக் கூறினார் அன்றி இயைதல் பொருள்படக் கூறிற்றிலர் ஆதலின், வேற்றுமைத்தொகை மொழி என்பது வேற்றுமை உருபினது குறைதலை உடைய மொழி என விரியுமன்றி அவர் கூறியவாறு விரியாமை ஆசிரியர் அவ்வாறு விரித்து யாண்டும் கூறாமையான் அறியக்கிடத்தலானும், பிறவும் அன்னவே ஆதலானும், அவ்வாறு விரியும் எனின் ‘வரிப்புனைபந்து’ என்பதன் கண் வரிந்து என்னும் வினையெச்சப் பொருள்பட அச்சொற்கள் தம்முள் இயைதலான் அதனை வினையெச்சத் தொகை எனவும், வினைத்தொகையும் பெயரெச்சம் போலவே ஈறும் முதலும் இவை எனப்பட்டுப் பிளவுபட நிற்றலான் அதனைத் தொகாநிலை எனவும் வேண்டுமாதலானும், ‘அறம் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்’ குறள்.321 என்புழி அறம்யாது- அல்லதுயாது- எனத்தனித் தனிப் பயனிலை கொண்ட அறமல்லது என்பன பிளவுபடாது ஒன்றாய் நிற்றலின் அவையும் தொகையெனப்படும் ஆதலானும், பிணிக்கு மருந்து என்பது வேற்றுமைஉருபு விரிந்து நிற்பினும் கொடுக்கும் மருந்து என வேற்றுமைப்பொருள் படத் தம்முள் இயைதலானும், பவளம் போலும் வாய் என உவமஉருபு விரியினும், செந்நிறத்தை உடைய வாய் என உவமப்பொருள்படத் தம் இயைதலானும் அவையும் தொகை எனப்படும் ஆதலானும், அன்மொழி தொகாது அதன் பொருள்படத் தொக்க தொகை எனலே ஆசிரியர் கருத்தெனின் அல்பொருள் |