பக்கம் எண் :

24 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொகை எனப் பெயர் கூறலே அமையும் அன்றி அன்மொழித்தொகை எனல்
அமையாமையானும் அவர் உரை பொருந்தா என்க.

அன்றியும் ஆசிரியர் தொகைமொழிக்குத் தனித்தனி இலக்கணம் கூறித் தொகை
என்னும் பெயர்தந்து ஈற்றின் கண்,
 

  ‘முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்கு உடன் நிலையலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்
அந்நான்கு என்ப பொருள்நிலை மரபே’
சொல்.419
எனவும்,
 
  ‘எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய’ சொல். 420

எனவும் அவ்வறுவகைத் தொகைக்கும் பொது இலக்கணமும் கூறினமையான் யாதானும்
ஓர் இடைச்சொல் நின்று தொகுதலும் அந்நால்வகைப் பொருள்நிலை மரபுள்
ஒன்றுடையவாகி ஒருசொல் நடைய ஆதலுமே தொகை இலக்கணம் எனப்படுதலின்.
இருந்தான்மாடத்து முதலியவற்றுள் உருபு தொகினும் அப்பொருள்நிலை மரபுள் ஒன்றை
உடைய ஒருசொல்நடை பெறாது இருந்தான் என்பது மாடத்தைப் பயனிலையாகவும்
மாடம் என்பது இருந்தானைப் பயனிலையாகவும் கொண்டு பிறிது ஒருசொல்லை
அவாவாது நிற்றலான் இரண்டு பொருள்நிலை உடைய இருசொல்லாகவே முடிந்து
ஒருசொல் நடைய ஆகாமையின் தொகைமொழி ஆகா என்பதம்,

பெயரெச்சத்தொடர் முதலியவற்றுள் பொருள்நிலை மரபு ஒரு மொழிக்கண்ணது
ஆயினும் ஆண்டுத் தொக்கன ஒன்றும் இன்மையான் அவையும் தொகை ஆகா
என்பதும்,

வேழக்கரும்பு முதலியவற்றுள் வேற்றுமைஉருபு முதலியன போல வெளிப்பட
நின்ற இடைச்சொல் தொகாவிடினும் இன்னது இது என வரூஉம் இயற்கை உடைய