பக்கம் எண் :

அன்மொழித்தொகை ஆராய்ச்சி29

இனிப் பண்புதொக வரூஉம் கிளவி என்றாற்போல, உம்மைதொக்க கிளவி-
வேற்றுமைதொக்க கிளவி- எனக்கூறின், ‘வருவது போவது மக்களான் அறியப்படா’
என்ற இடத்து வருவது போவது என்னும் வினைம்பெயர்க்கண்ணும் உம்மை தொகலான்
அவற்றையும் நிலங்கடந்தான் முதலிய வினைப்பெயரொடு நின்ற வேற்றுமைத்தொகையுள்
கடந்தான் முதலிய வினைப்பெயரையும் ‘கிளவி’ என்னும் பொதுச்சொல் நீக்காமையின்
அவற்றின்கண்ணும் அன்மொழித் தொகை நின்று இயலும் எனக் கொள்வர் எனக்கருதி
அதனை நோக்கி இருமொழியும் பெயராய் இடத்தே அன்மொழித் தொகை நின்று
இயலும் என்பார் ‘உம்மை தொக்கபெயர்’ வேற்றுமைதொக்க பெயர்’ என்று கூறினார்.

இனிக் கிளவியானும் என்றாற்போலப் பெயரானும் எனக் கூறின் அவை
குறைவுசீர்த்தாய அடிகளாம் ஆதலின் அவ்வாறு கூறாது அவ்வடிகள்
முற்றுப்பெறுதற்கும். அப்பெயர் அன்மொழித்தொகைக்குச் சார்பாம் என்பது
அறிவித்திக்கும் ‘பெயர் வயினானும்’ எனக் கூறினார். பெயர்கள் சார்பாம் என்பது
நின்றியலும் எனலான் உய்த்து உணரற்பாற்களின், அது சொல்லின் வழியே ஆதலின்
அதுகடாஅன்று என்பது.

இனி, ஈற்றுநின்ற ஒரு பெயர்பற்றிநிற்கும் அன்மொழித் தொகையை முன்னரும்,
இருபெயர்பற்றிநிற்கும் அன்மொழித் தொகையை அதன் பின்னரும் கூறலே முறை
ஆயினும், ஈறும் என முதற்கண் கூறின் பண்புத்தொகையும் உம்மைத்தொகையும்
வேற்றுமைத்தொகையும் அல்லாத ஏனைய ஈற்றும் எனக் கூறல்வேண்டும் ஆதலின்
அவ்வாறு கூறாது சுருங்குதல்பற்றி அவற்றின் பின்னர் ‘ஈற்றும்’ எனக் கூறினார்.

இனி, முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும். இரு மொழிமேலும் ஒருங்கு
உடன்நிலையலும் அம்மொழி நிலையை அன்மொழி நிலையலும் ஆகிய நால்வகைப்பொருள்நிலையுள், பெரும்பான்மை முன்மொழிப் பொருளவும் சிறுபான்மை