பக்கம் எண் :

30 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பின்மொழிப் பொருளவும் ஆகிய வேற்றுமைத் தொகை உவமைத்தொகை களையும்
முன்மொழிப் பொருட்டாகிய வினைத்தொகையையும் ஒருமொழிக்கண் பொருள்
நிலையல் பற்றி முன்னரும், பண்புத்தொகையுள் சிறுபான்மை பின்மொழி நிலையலும்
பெரும்பான்மை இருமொழிமேலும் ஒருங்கு உடன்நிலையலும் பற்றி அதனை அவற்றின்
பின்னரும், உம்மைத்தொகையுள் இருமொழி மேலும் ஒருங்கு உடன்நிலையல் பற்றி
அதனை அதன் பின்னரும், அன்மொழித்தொகையுள் யாது அல்லாத மொழி என வினா
நிகழும் ஆதலின் அவை அல்லாத எனப் பொருள்படுமாறு அன்மொழித்தொகையை
அவ்வைந்து தொகைக்கும் பின்னருமாக ‘வேற்றுமைத் தொகையே உவமத்தொகையே’
என்னும் சூத்திரத்துள் கூறினார். அவற்றுள்ளும் ஒருமொழிக்கண் பொருள்நிலையல்
உடைய வேற்றுமைத்தொகை முதலிய மூன்றனுள் ஏனைய அல்வழி ஆதலின்
வேற்றுமைத் தொகையை முன்னரும், உவமத்தொகை வேற்றுமைத் தொகைபோல
இருமொழியும் பெயராக நிற்றலின் அதனை அதன் பின்னரும், வினைத் தொகைக்கண்
வருமொழி ஒன்றே பெயராக நிற்றலின் அதனை அதன் பின்னரும் பண்புத்தொகை
சிறுபான்மை ஒரு மொழிப்பொருட்டும் பெரும்பான்மை இருமொழிப்பொருட்டும்
ஆகலின் அதனை ஒரு மொழிப்பொருட்டாகிய வினைத் தொகைக்கும் இரு
மொழிப்பொருட்டாகிய உம்மைத் தொகைக்கும் இடையினும் கூறினார்.

பொருள் நிலையலாவது பயனிலை கொள்ளுந்தன்மை உடைத்து ஆதல். அது
வேங்கைப்பூ நறிது- பாமாலை பாடினான்- என்புழி- அவ்வேற்றுமைத்தொகையுள்
பின்மொழியாகிய வேங்கையும் முன்மொழி ஆகிய மாலையும் பயனிலை கொள்ளாமல்
முன்மொழி ஆகிய பூவும் பின்மொழி ஆகிய பாவுமே பயனிலையோடு இயையுமாற்றான்
அறியப்படும். வேற்கண் முன்மொழி நிலையல்; பெண்ணணங்கு பின் மொழி நிலையல்;
அணங்கு போலும் பெண் என்பதே அகத்து ஆகலின். அவை உவமத்தொகை.