பக்கம் எண் :

அன்மொழித்தொகை ஆராய்ச்சி31

அடைகடல் பின்மொழி நிலையல்; கடலும் கடல் அடைத்த இடமும் கடல்
எனப்படுதலின், அடையாகிய கடல் என விரியினும் கரை கூறுதலே கருத்தாம் ஆதலின்.
ஏனைய கருங்குதிரை சாரைப்பாம்பு முதலியன இருமொழி மேலும் ஒருங்கு உடன்
நிலையல்: அஃது இருமொழியும் ஒருங்கு கூடியே பயனிலை கொள்ளுமாற்றான்
அறியப்படும். அவை பண்புத்தொகை. பிறவும் அன்ன. முன்மொழி நிலையல்,
பின்மொழி நிலையல் என்புழி முன்பின் என்பன இடம் பற்றி வந்தன.

இதுவே அறுவகைத் தொகையின் முறை ஆயினும் சொல் சுருங்குதல் பற்றி
உவமத்தொகையும் வினைத்தொகையும் ‘ஈற்றும்’ என்பதன்கண் அடங்க ஈற்றின்கண்
கூறி, அவற்றை ஒத்த ஒருமொழிப் பொருட்டாகிய வேற்றுமைத் தொகை அவற்றுக்கு
இனம் ஆதலின் அதனை ஈற்றும் என்பதற்கு முன்னர்ச்சாரவைத்து, ஏனைய
பண்புத்தொகை உம்மைத்தொகைகளை முன்போல் கூறினார். இதனால், முறையின்றிக்
கூறினார் எனல் பொருந்தாமை காண்க.

இனி, அன்மொழி என்னும் சொற்குப் பிறர் எல்லாம் தொக்கசொல் அல்லாத
மொழி எனவே உரை கூறினார். அஃது உரையன்று. என்னை? வெள்ளாடை என்னும்
தொக்க சொல்லுக்கு அவ்வாடையை உடுத்தானே அன்றி அதனை நெய்தானும், அதனை
விற்றானும் அதனைக் கொண்டானும் அதனைக் கிழித்தானும் அதனைப் பார்த்தானும்
அதன்கண் இருந்தான் நின்றான் முதலியவும் பிறவும் அத்தொக்கசொல் அல்லாத
மொழியே ஆதலின் அவையும் தொக்க எனல் வேண்டும் ஆதலானும், அவ்வாறு கூறின்
தொக்கசொல்லுக்கும் அன்மொழிக்கும் யாதானும் ஓர் இயைபு வேண்டப்படாமையானும்,
அன்மையும் முன்னர்க் கூறப்பட்டது ஒன்றனது அன்மையை உணர்த்தும் அன்றிக்
கூறப்படாதவற்றின் அன்மையை உணர்த்தாமையானும், அன்மொழித்தொகை எனப்பெயர் கூறுதற்கு முன்னர் யாண்டும் தொக்கசொல் என ஆசிரியர் கூறாமையின் தொக்கசொல்