பக்கம் எண் :

அன்மொழித்தொகை ஆராய்ச்சி35

‘பொருள்முதல் ஆறோடு அளவைகொள் தானி’ (192)

என்னும் ஆகுபெயர்ச் சூத்திரத்து விசேடவுரையில் இக்கருத்தே அமையக் கூறினார்.

இனி,

  ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு’

 

என்பதில் கனங்குழை என்பதற்குக் கனவிய குழையை உடையாள் எனப் பொருள்
கூறின் அஃது ஆய்மயில்கொல் என்னும் அஃறிணை முடிபு ஏற்று வழுவாதலின் அவள்
உருவம் முதலியவற்றையே ஆகுபெயரான் உணர்த்தி உருவம் அணங்குகொல்
பிறிதுகொல், சாயல் ஆய்மயில்கொல் பிறிது கொல், நோக்கம் மாதர்கொல் பிறிதுகொல்-
என வழுவின்றி முடிதலின் பரிமேலழகர் ஆகுபெயர் என்றது இக்கருத்தே பற்றி எனின்,
அவை அவாய்நிலையானே பெறப்பட்டு அணங்குகொல், ஆய்மயில்கொல், மாதர்கொல்
என ஐயமுறுதற்கு ஏதுவாய் நிற்றலானும், ஏதுவாவன எழுவாயாயின் ஏதுவாவன பிற
வேண்டுமாகலானும், உருவம் முதலிய பொதுச்சொல் கிளத்தல் திணை பால் முதலிய
துணியப்படாதவற்றிற்கே யன்றித் துணியப்பட்டவற்றிற்கு வேண்டியது இன்று ஆகலானும்,
இக்கனங்குழையாளது உருவம்- சாயல்- நோக்கம்- என விளங்கக் கூறுவர் ஆகலானும்,

சுருக்கி விளக்கலே அவர்க்கு இயல்பு ஆகலின் பதவுரையில் வாளா கூறி
விசேடவுரையில் “எழுதலாக வுருவுந் தன் வருத்தமும் பற்றி அணங்குகொல் என்றும்
சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி ஆய்மயில்கொல் என்றும் தன்னெஞ்சஞ்
சென்றமையும் அவளெதிர் நோக்கியவாறும் பற்றி மாதர்கொல் என்றும்’
எனவுரைத்தமையானே விளக்கினார் என்றார்க்கு, அவர் அதனானே ஒருதலைக்
காமத்துட்பட்டு நின்ற தலைவற்குத் தலைவி வடிவம் முதலியன சிறந்துழி யன்றி
ஐயநிகழாமையின் அங்ஙனம் ஐயம் நிகழ்ந்தமைக்கு எது கூறினாரேயன்றி ஆகுபெயர்
இன்னது என்பதை விளக்கக் கூறினார் அல்லர் என்பது பெறப்படுதலானும், அது,