பக்கம் எண் :

38 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒவ்வொரு பகுபதத்திலும் பகுதி, விகுதி என்ற ஈர் உறுப்புக்களும் தவறாது
வருதல் வேண்டும். சில பகுபதங்களில் விகுதி மறைந்திருப்பதும் உண்டு.

  பொன்னன்- பொன்+அன்
பொன்- பகுதி; அன்- விகுதி

னகரம் தனிக்குறில் முன் ஒற்று ஆதலின் இரட்டித்தது.
(சொற்களின் புணர்ச்சி விதி பெரும்பாலும் பகுபத உறுப்புக்கள் இணையும்போதும் கொள்ளப்படும்.)

எ-டு:

  வலையன்- வலை+அன்
வலை- பகுதி; அன்- ஆண்பால் விகுதி;
யகரம் உடம்படுமெய்.
அறிஞன்- அறி+ஞ்+அன்
அறி- பகுதி; அன்-விகுதி; ஞகரம் பெயரிடை நிலை

வினை யிடைநிலைகள்:-

இறந்தகால இடைநிலை- த், ட், ற், இன் என்பன. இவற்றுள், ‘இன்’ என்ற
இடைநிலை புணரும்போது இகரம் கெட்டு வருதலும், னகரம் கெட்டு வருதலும்
இரண்டும் கெட்டு வருதலும் உண்டு.
 

  உண்+ட்+ஆன்- உண்டான்
வை+த்+ஆன்- வைதான்
உறு+ற்+ஆன்- உற்றான்
போ+இன்+ஆன்- போயினாள்
போ+இ(ன்)+ஆன்- போனான்
மேவு+இ(ன்)+உ- மேவி

‘காட்டி’, ‘பாய்ச்சி’ முதலிய செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள், காட்டு+இன்+உ; பாய்ச்சு+இன்+உ முதலிய பகுதியவாய்ப் பிரிக்கப்படும்.