பக்கம் எண் :

அன்மொழித்தொகை ஆராய்ச்சி7

அற்றேல், பாவை போல்வாளைப் என்றாற்போல மயில் போல்வாளை மயில் என்றார்
எனக்கொள்ளின், கனங்குழை என்பது அஃறிணையொடு மயங்காது ஐயப் பொதுச் சொல்
ஆகும் ஆதலின் அன்மொழித்தொகை ஆதற்கு ஓர் இழுக்கு இன்றாம் பிறஎனின்,
அவ்வாறு கூறலும் பொருந்தாது; என்னை? ஆய்மயில் போல்வாள் தெய்வமகளாதல்
அல்லது மானுடமகளாதல் வேண்டும். தெய்வமகள் எனின் அணங்குகொல் என
முன்னர்க் கூறப்பட்டமையானும், மானுடமகள் எனின் மாதர்கொல் எனப் பின்னர்க்
கூறப்பட்டமையானும், கூறியது கூறலாக முடிதலின் என்பது.

இனிப் பரிமேலழகரும் கனங்குழை என்பதற்கு இக்கனவிய குழையினை உடையாள்
என அன்மொழித்தொகைப் பொருளாகவே பதவுரை கூறி, இலக்கணம் கூறும்இடத்து
மாத்திரம் பெயர் மாத்திரையான் வேறுபட ஆகுபெயர் என உரைத்தார் ஆதலின்
அன்மொழித்தொகை என்றால் படும் குற்றம் ஆகுபெயர் எனக் கூறினும் எய்தும்
அன்றே; அதனால் அவர் உரையும் கொள்ளற்பாற்று அன்றெனின், குறள் போலவே
பொருள் ஆழம் மிக உடைய அவரது நுட்ப உரையை முன்பின் பார்த்து அவர்
கருத்தை உணரும் ஆற்றலின்றி இங்ஙனம் கூறல் எவ்வாற்றானும் பொருந்தாது; பின்னர்ப்
பொருந்துமாறு என்னையோ எனின், கூறுதும்:

அவர் பதவுரையானும் ஐயமின்றி விளங்கும் இலக்கணங்களை விசேடவுரையில்
எழுதாது பிற இன்றியமையா இலக்கணங்களையே அதன்கண் எழுதுவர். விசேடவுரையில்
எழுதும் இலக்கணத்தால் ஐயமின்றி விளங்கும் பொருளையும் அவ்வாறே பதவுரை
கருதுரைகளில் விளக்காது ஏனைய பிற பொருளையே எழுதுவர். இன்னும் அவர்
உய்த்துணர்வார்க்கே பொருள் விளங்குமாறு எத்துணைச் சுருங்க உரைத்தல் இயலுமோ
அத்துணைக்கு மேல் ஓர் எழுத்தினும் யாண்டும் எழுதார். இதுவே அப்பேரறிவாளரது
உரைநடை இயல்பாதலின், ஒண்டொடி முதலிய அன்