காலைபடித் துறை,வேதத் தொனி,வேள்வி வளர்த்தல், தமிழ்முதற்கல் விகள்பயிறல், பாடலுடன் ஆடல் நாலுவரு ணரும்பிறவும் அவரவர்செய் தொழிலே தடத்தலுமே மருதநிலக் கருப்பொருளாய் வருமே. [8] | மருதத்துக்குரிய கருப்பொருளின் தொடர்ச்சி இது. உரை : சோலைக்குயில், வண்டு, மயில், பூந்தோட்டம், மதிள், கூடகோபுரம், மேடை, மாடம், வேலி, மாளிகை, கோவில், குளம், நதிநீராடல், கிணைமங்களம், முழவு, மருதயாழ், சாலை, படித்துறை, வேதத்து ஒலி, வேள்வி வளர்த்தல், தமிழ் முதலிய கல்வி பயிறல், பாடல், ஆடல், நாலு வருணத்தாரும் பிறரும் அவரவர் தொழில் செய்தல் ஆகியனவும் மருதத்துக்குரிய கருப் பொருள்களாகும். விளக்கம் : இதுவும் மேலைச் சூத்திரமும் நம்பியகப்பொருள் 23ஆம் சூத்திரத்தைத் தழுவியன. ஆயினும் இவர் புதிதாகத் தமிழ் முதற்கல்விகள் பயிறல், பாடலுடன் ஆடல் போன்றவற்றையும் விதந்து சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. மதிள் என்பது மதிழ் என்று மாறியுள்ளது. ளகரம் ழகரமாக மாறி வருவது, இந்நூலில் பல இடத்திலும் காணப்படுகின்றது. 79. | வருணன்,சேர்ப் பன்பரத்தி, பரவர்,பரத் தியர்கள், மற்றளமா சடல்,காக்கை, சுறவுமுதல் மீன்கள், வரிபனை,பட் டில்நெய்தல், உவர்க்கேணி, கைதை, வெண்சங்கு, பவள(ம்),முத்து, நண்டு,ஆமை, ஞாழல், சொரிமணல்,நீர், முள்ளி,புன்னை, அடம்புதில் லைமுதல் தோணி,நாவாய், புணை,மீன்கோட் பறை,செவ்வ ழிப்பண், ஒருவிளரி யாழ்,உப்பு, மீன்படுத்தல், விற்றல், உணக்கல்,கட லாடல்,புள் ளோப்புலு(ம்)நெய்தற் புணர்ப்பே [9] | நெய்தலுக்குரிய கருப்பொருளைத் தொகுத்துக் கூறுகின்றது. |