சுவாமிநாதம்170பொருளதிகாரம்
 

     உரை : வருணன், சேர்ப்பன், பரத்தி, பரவன், பரத்தியர்கள், காக்கை,
சுறா முதலிய மீன்கள், பனை, பட்டில், நெய்தல், கேணி, கைதை, சங்கு,
பவளம், முத்து, நண்டு, ஆமை, ஞாழல், மணல், நீர், முள்ளி, புன்னை,
அடம்பு, தில்லை, தோணி, நாவாய், புணை, மீன்கோட்பறை, செவ்வழிப்பண்,
விளரியாழ், உப்பு, மீன் படுத்தல், உணக்கல், விற்றல், கடலாடல், புள் ஓப்பல்
ஆகியவை நெய்தற்குரிய கருப்பொருள்.

     விளக்கம் : இது நம்பியகப்பொருள் 24ஆம் சூத்திரத்தை ஒட்டியது.

80. புணர்வு,பிரிவு, இருப்பூடல், இரங்கல்அவ் வநிமித்தம்
     போற்றும்இரண் டிரண்டாய்ஐந் திணைக்கும் உரிப்
                                           பொருளாய்
மணம்உறுமுப் பொருள்களுந்தத் தந்திணையில் அன்றி
     மயங்கலுமாம்; ஐந்திணையிற் பெருந்திணைகைக் கிளையை
அணவலுமாம் அதிலதிற்கை கோள்களவு கற்பு என்றுஇ ரண்டாம்
     அதின்இயற்கைப் புணர்ச்சி,இடந் தலைப்பாடுஅன் பரிற்கூட்
டுணர்இகுழைக் கூட்டெனநால் வகைகளவிற் புணர்வாம்,
     உரைஇயற்கைப் புணர்ச்சி முன்கைக்கிளை நிகழ்தல் கடனே.
                                                 [10]

இது உரிப்பொருளின் வகையும் ஐந்திணை நிகழ்ச்சிகளும் கூறுகின்றது.

     உரை : புணர்வும், புணர்வு நிமித்தமும்; பிரிவும், பிரிவு நிமித்தமும்;
இருத்தலும், இருத்தல் நிமித்தமும்; ஊடலும், ஊடல் நிமித்தமும்; இரங்கலும்,
இரங்கல் நிமித்தமும்; ஆகியவை ஐந்திணைக்கும் உரிய பொருளாம். மணம்
உறு முப்பொருளான புணர்வு, பிரிவு, இருத்தல் என்ற மூன்றும் தனக்குரிய
திணையோடு பிறதிணையிலும் மயங்கும். ஐந்திணையில் பெருந்திணையும்,
கைக்கிளையும் மயங்கும் ஐந்திணையில் களவு, கற்பு என இரண்டொழுக்கம்
நிகழும் களவானது, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, அன்பரிற்கூட்டு