சுவாமிநாதம்287
 

2. சொல்லணி மரபு

194. முதல்எழுத்தின் கூட்டம்இடை பிறிதுஇலதும் பெயர்த்தும்
     ஒழியவேறே பொருள்தந்திடின் மடக்குஎன் றாகும்;
அதுவும்ஓ ரடிமுதல்நான்கடிகாறுஞ் சேரும்;
     ஆதிஇடை, பின்,முதலோடு இடை,கடை,பின் னிடையே, உதவும்முழு துடன்எழுவ கைத்தாம்;ஓ ரடியே
     ஒழித்தல்இணை முதல் விகற்பம் போல்பதினொன்று
                                         உளவாம்;
அதமில்அடி முழுதுமடக் கலுமாம்;ஓ ரெழுத்து
     மடக்குதலும் அதற்கு உரித்தாஞ் சொல்லணியின்
                                     வரைவே.  [1]

இது மடக்கு அணி உணர்த்துகின்றது.

     உரை : எழுத்துக்களின் சேர்க்கை (கூட்டம்) யோடு பிற எழுத்தும்,
சொல்லும் நடுவே வந்தும், நடுவே வராமலும் இருக்க அச்சேர்க்கை மடக்கி
வந்து இருவேறு பொருளைத் தருவது மடக்கு அணி. அம்மடக்கு ஓரடியிலும்
இரண்டு அடியிலும் மூன்று அடியிலும் நான்கு அடியிலும் வரும். இது 1.
ஆதிமடக்கு, 2. இடைமடக்கு, 3. கடைமடக்கு, 4. ஆதியோடு இடைமடக்கு,
5. ஆதியோடு கடைமடக்கு, 6. இடையோடு கடைமடக்கு, 7. முழுது மடக்கு
என ஏழுவகைப்படும். ஓரடி மடக்கு நீங்கலாக உள்ளவற்றில் தொடையின்
இணை முதலாகிய