சுவாமிநாதம்288அணியதிகாரம்
 

விகற்பத்தொடை போலப் பதினொன்று ஆக அமையும். அடிமுழுவதும்
மடக்குதலும் ஓரெழுத்து மடக்குதலும் என இருவகையாகவும் பிரிக்கலாம்.

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 92, 93, 94, 95 ஆகிய
சூத்திரங்களை அடியொற்றியது.

195. வருங்கோமூத் திரி,சருப்ப தோபத்திரம், மாலை
     மாற்றுஎழுத்துச்சுதஞ்சதுரங் கக்கவி,சக் கரமே,
கரந்துறையுஞ் செய்யுள்,சுழி குளங்,கூடச் சதுக்கம்
     காதைகரப்பு, எழுத்துவருத் தனம்,ஒற்றுப் பெயர்த்தல்,
விரிந்ததிரி பங்கிதிரி பதாதிநிரோட் டி,வினா
     விடை,முரசு பெந்தம்,மாத் திரையின்வருத் தனமே,
பிரிந்தமாத் திரைச்சுருக்கம், பிறிதுகவி, கடக
     பெந்தம்,தேர்க் கவி,நாக பெந்தமுஞ்,சேர்க் குவரே   [2]

சித்திர கவிகளின் விரி உணர்த்துகின்றது.

     உரை : 1. கோமூத்திரி, 2. சருப்பதோ பத்திரம் 3. மாலை மாற்று, 4.
எழுத்துச் சுதம், 5. சதுரங்கம் 6. சக்கரம், 7. கரந்துறையும் செய்யுள், 8.
சுழிகுளம் 9. கூடச்சதுக்கம், 10. காதை கரப்பு, 11. எழுத்து வருத்தனம், 12.
ஒற்றுப் பெயர்த்தல், 13. திரிபங்கி, 14. திரிபதாதி, 15. நிரோட்டி, 16.
வினாவிடை, 17. முரசுபெந்தம், 18. மாத்திரையின் வருத்தனம், 19. மாத்திரைச்
சுருக்கம், 20. பிறிதுகவி, 21. கடகபெந்தம், 22. தேர்க்கவி, 23, நாக பெந்தம்
ஆகிய இருபத்து மூன்றும் சித்திரக் கவிகளின் பாகுபாடுகளாம்.

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 98-ஆம் சூத்திரத்தை ஒட்டியது.
ஆயினும் நூலுள் பன்னிரண்டு வகையே கூறப்பட்டுள்ளது. உரையில் உள்ள
எட்டும் புதிதாகச் சதுரபங்கம், கடகபெந்தம், தேர்க்கவி ஆகிய மூன்றும்
சேர்த்து 23 என்று சாமிகவிராயர் கூறுகிறார்.