24. |
புல்லும், நட,வா,மடி, சீ,விடு,கூ,வே, வை, நொப், போ, வௌ,வொடு எய் உரிஞ்,உண், பொருந்,திருந்,தின் | |
தேய், பார் |
| |
செல்,வவ்,வாழ்,கேள், அஃகிருபான் மூன்று; ஈற்றிற் சேர்த்த முதனிலை யீண்டு தெரிநிலையின் வினைக்கே சொல்பகுதி; வினைமரபிற் பிறவினைக்கு எண்வகையாய்ச் சொல்லும்ஈ ரேவலின்வினைக் குப்பகுதியதாம். பொருளே நல்லிடங் காலஞ்சினையே குணந்தொழில் என்றாறு நாட்டுவினைக் குறிப்பின்வரும் பகுதியெனக் கொளுமே. (2) | பகுதியின் விரி கூறுகின்றது. உரை: பொருந்திய, நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்ற இருபத்து மூன்று பகுதிகளும் தெரிநிலை வினைக்கு உரியன. அவை வினைச்சொல்லில் பிறவினைக்கு எட்டு வகையாகச் சொல்லும் ஈரேவல்வினைப் பகுதியாக இருக்கும். ஏவல் வினைக்குப் பகுதியாக வரும். பொருள், இடம், காலம், சினை, குணம் தொழில் என்ற ஆறு வகையாகக் குறிப்பு வினையின் பகுதி வரும். விளக்கம் : குழையன் | - குழை என்பது குறிப்பு வினையின் பொருள் பகுதி. | அகத்தன் | - அகம் என்பது குறிப்பு வினையின் இடப் பகுதி. | ஆதிரையன் | - ஆதிரை என்பது குறிப்புவினையின் காலப் பகுதி. | பல்லன் | - பல் என்பது குறிப்பு வினையின் சினைப் பகுதி. | கரியன் | - கருமை என்பது குறிப்பு வினையின் குணப் பண்புப் பகுதி. | |