போல நன்னுலார் சொன்ன ‘ஒன்றொழி பொதுச் சொல்லை’ (269) விலக்கியுள்ளார். இவர் பொருள் மாற்றையும் (பொருள்கோள்) குறிப்பில் ஒரு வகையாகக் கொண்டுள்ளது புதுமையாக உள்ளது.
37. |
அவைஇயற்சொல் திரிசொல்எனும் இருவகைச்சொல்
இயல்பின் அப்பெயர்ச்சொல் வினைச்சொல்இலாம் இடையுரியாங் | |
கடுக்கும்; | | |
இவையல்லால் திசைச்சொல்வட சொல்இரண்டும் கலக்கும் எப்பகுப்பும் இருதிணைச் சொற்பதினாறு விரிவாம்; உவையினிற்செந் தமிழாகித் திரியாதி யார்க்கும் உணர் பொருளை விளக்கும்இவற் சொல்தானோர்; | |
பொருளைக் |
| |
கவரபல சொற்பலபொரு ளைக்கயர்,ஒரு சொல்லாகிக் களிபொருளை யரிது(உ)ணர்த்திக் காட்டல்திரி சொல்லே. | |
(4) |
| சொல்லின் மற்றொரு பாகுபாடும் அவை சிலவற்றிற்கு விளக்கமும் கூறுகின்றது. உரை : இயற்சொல், திரிசொல் என்னும் இருவகைச் சொல்லும் இயல்பினால் பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லுமாம். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் திசைச் சொல் வடசொல் என்ற இருவகையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தம் பதினாறு வகையான சொல்பாகுபாடு உடைத்து. செந்தமிழ் நிலத்து மொழியாகி யாவர்க்கும் உணர்பொருளை விளக்குவது இயற்சொல். ஒரு பொருளுக்குப் பல சொல்லும் பல பொருளுக்கு ஒரு சொல்லும் பொருள் அரிய முறையில் உணர்த்திக் காட்டுவது திரிசொல்லாகும். விளக்கம் : இயற்சொல்லைப் பொது மொழி (Standard or common language) என்று கூறி அது ஒரு நாட்டு மக்கள் எல்லோரும் அறியக் கூடிய பொதுவான சொற்களைக் கொண்டது ஆகும் என்றும், திரிசொல்லைச் சிறப்பு மொழி (Special Language) என்று கூறிக் கற்றுத்துறை போகியவர்கள் |