சுவாமிநாதம்78சொல்லதிகாரம்
 
(தொல். சொல். 400). இது கிளை மொழிச்சொல் என்பது பொருத்தமாக
உள்ளது. ஆனால் நன்னூலாரும் அவரையொட்டி இலக்கண விளக்கத்தாரும்
செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதியிலும் தமிழகம் நீங்கிய
பதினேழு நிலத்தினும் தத்தம் குறிப்பினான் வழங்குவது திசைச்சொல்
என்றனர். இவ்விளக்கம் கிளைமொழிச் சொற்களையும் பிற
மொழிச்சொற்களையும் திசைச் சொற்களாகக் குறிப்பிடுகின்றது.

     வடமொழிச் சொற்கள் என்பது வடமொழி என்று சிறப்பித்துச்
சொல்லப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்களும் கடன் வாங்கப்பட்ட ஏனைய
மொழிச் சொற்களுமாகக் கொள்ளலாம் என்று பலரும் ஒத்துக்கொள்கின்றனர்.
அவ்வாறாயின் வடமொழிச் சொல்லையும் சேர்த்துக் கொண்டால்
கடன் வாங்கப்பட்ட சொற்களை நன்னூலார் கருத்துப்படி இரண்டு பெரும்
பிரிவுள் உட்படுத்தலாம் என்று ஆகிறது. தொடர்பில்லாத பிற மொழியிலிருந்து
வாங்கப்படும் சொற்களைத் திசைச் சொற்கள் என்றும் வட மொழியிலிருந்து
வாங்கிய சொற்களை வட சொற்கள் என்றும் கொண்டார் என்று நாம்
கருதலாம். எனவே திசைச்சொல்லும் இரு பிரிவாக ஆகிறது ஒரு மொழியின்
கிளைமொழியிலிருந்து வாங்குவது ஒரு வகையையும் தொடர்பில்லாத
பிறமொழிகளிடமிருந்து வாங்கப்படும் சொற்கள் மற்றொரு வகையையும்
சேர்ந்தன என்று கொள்ளலாம். நேரடித் தொடர்பு மூலம் அதாவது
அம்மொழி பேசும் மக்களோடு தொடர்பு கொள்வதால் வாங்குகிற சொற்கள்
திசைமொழிச் சொற்கள் என்று கொண்டனர். ஆனால் சாமி கவிராயர்
ஒரு மொழியின் கிளை மொழியிலிருந்து வாங்கப்படும் சொல்வகையைக்
குறிப்பிடாது தொடர்பில்லாத பிறமொழிகளிலிருந்து வரும் சொற்களை
மட்டுமே திசைச் சொற்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

     வடசொல் என்பது சமஸ்கிருதமொழிச் சொற்களை மட்டுமின்றிக் கடன்
வாங்கப்பட்ட எல்லாச் சொற்களையும்