பொதுவாகக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று மேலே கூறப்பட்டது. வடமொழி பேசும் மக்களோடு மட்டும் தொடர்பு இருந்ததாலும் வடமொழி நூலைப்படிக்கும் வாய்ப்பு இருந்ததாலும் அம்மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்களைக் குறிக்கச் சிறப்பாக வடசொல் என்று குறிப்பிட்டனர். மேலே கொடுக்கப்பட்ட விளக்கத்தையொட்டிப் பார்க்கும் போது நேரடித்தொடர்பு உடைய மொழியிலிருந்து சொல்லைக் கடன் வாங்குவது மட்டுமே வடசொல் என்று கொள்ளவேண்டும். இம்முறைப்படி இன்றைய மொழிநிலையில் ஆங்கில மொழியிலிருந்தும் பிற இந்திய மொழியிலிருந்தும் கடன் வாங்குவது ஒரு வகையாகவும் நேரடித் தொடர்பு இல்லாத ஸ்பானிஷ், ரஷ்யன் போன்ற மொழிச் சொற்களையும் கடன் வாங்குவது மற்றொரு வகையாகவும் கொள்வது போன்றது. பகாப்பதம் எல்லாம் இடுகுறியாகவும் பகுபதம் எல்லாம் ஓரளவு காரணப் பெயராகவும் கருதுவர் மொழியியலார். இடுகுறிப்பெயர் மரபு பற்றியும், காரணப்பெயர் ஆக்கப்பாடு பற்றியும் வரும். வேற்றுமை ஏற்கும் இலக்கணம் தவிர ஏனையவை சொல்லின் பொது இலக்கணத்திலும் (‘இருதிணை ஐம்பால் மூவிடத்தாய்’ - சூத். 34-1) காணப்படுவது நோக்கத்தக்கது. இச்சூத்திரம் நன்னூல் 273, 274, 275 ஆகிய சூத்திரங்களைத் தழுவி எழுதப்பெற்றது. 39. | ஆண்டபொருள், இடம்,காலஞ், சினை,குணமே, தொழிலோடு ஆறிடத்துஞ் சுட்டு,வினா, விடைச்சொல், உவமையினுந் தூண்டுபெயர் ஈறு ன, ள,வை,யிர், கள்உயர்பாற்; று,டு,று, வை,ய,க்கள் இழிபாற்; றொகுக்கும் ஈறிலவாய் வேண்டுவனவும் இருதிணைஐம் பால்உணர்த்துந்; திணையே விரவன்முதல் நான்கு;சினை நான்கு;சினை முதல் நான்கு; ஈண்டுமுறை யிரண்டு;தன் நான்கு;ஐந்து முன்னே,தான், தாம் எல்லாமும் பொது;ஆண் பெண் ஒன்றுபல வாக்கே (6) | பெயரின் பல வகைகளைப் பற்றிய விளக்கம் தருகின்றது. |