சுவாமிநாதம்110சொல்லதிகாரம்
 

      வந்தனர், வந்தார், வருப, பாடன்மார் எமரே - பலர்பால்
      வந்தது, பொருட்டு (பொருளை உடைத்து) பாடிற்று - ஒன்றன்பால்.

     வந்தன, வாரா - பலவின்பால்

வந்தனென், வந்தனன், வருவல் வருவேன்,
உண்கு, உண்டு, வருது, சேறு (செல்வேன்)
வந்தனம், வந்தாம் வந்தனெம், வந்தேம்,
வந்தோம், உண்கும், உண்டும், வந்தும், சென்றும்.
தன்மை
     
உண்டனை, உண்டாய், உண்டி, உண்ணல்,
அழால், அழேல், சொல்லிக்காண் 
உண்டனீர், உண்டீர், உண்ணும், உண்மின்.
முன்னிலை

     முன்னிலைக்குரிய ஈறுகள் இலக்கணவிளக்கம் 238 ஐ ஒட்டிக்
கூறப்பட்டுள்ளன; ஏனைய நன்னூலைத் (325) தழுவியன.

     பாட விளக்கம் : ‘அன்னென்’ (2வது வரி) அன்னேன் என்று
திருத்தப்பட்டுள்ளது ஏனெனில் முன்னரே ‘என்’ என்பது வந்துள்ளது.
‘ஏவலிலும்மு (4-வது வரி) என்ற மூலபாடம் ‘ஏவலிலும்மின்’ என்று
திருத்தப்பட்டுள்ளது.

51. ஈறு,முத னிலைதிரிதல், திரியாமை, விப்பி,
     இவற்றினிணைந்திடல், வெவ்வேறு உறலாய்,எண் வகையா
மாறில்பிற வினையே;அப் பிறவினைதன் வினையாய்
     வருதலுமா(ம்); முதனிலையின் றியுந்தொழிற்பேர் உளவாம்;
ஈறிலாத்தொ ழிற்பெயர்எச் சமு(ம்) முற்றுமாகும்;
     உண்டுஇன்மை யன்மைக்கும்படும் வேண்டுஞ், செயும்,யார்,
வேறுஎவனாங் குறிப்பல்லால் உம்,மாரை க,ய,ர
     மெய்யின்வியங் கோள்;எச்சம் பொதுவாய் முற்றிடுமே.  (5)

பிறவினை, தொழிற்பெயர், இருதிணைப்பொதுவினை ஆகியன
விளக்கப்படுகின்றன.

     உரை : முதனிலை திரிந்தும், திரியாமலும், இருவகை வினையின்
இறுதியிலும் ‘விப்,பி’ விகுதி இணைந்தும், இருவகை