சுவாமிநாதம்129சொல்லதிகாரம்
57. பண்பான வடிவு, அளவு, நிறங், காட்சி, கருத்தாய்ப்
பகர்உரித்தாய்ப் பெயர் வினை போன்றவைக்கடியாய்
 

முன்பின்

 
  எண் பாலினின்று உணராஉணர்த்தி உணர்த்தலிற்சார்ந்
தொருசொல் பலபொருட் பலசொல் ஒருபொருளாம்
 

உரிச்சொல்;

 
  எண்பாவின இருபாலும் இணங்கிட விகாரத்
தியன்று பொருள் அமைவுசெயும்; பிறிதுஎனினும் பொருளா
நண்பாண்மை யுறும்;பொருட்குப் பொருள் தெரியின்மிகவா(ம்);
நன்மதுரங் கொழித்திருக்கு நயப்பிடை வாய்த்திடுமே. (4)

உரிச்சொல் இலக்கணம் கூறுகின்றது.

உரை : வடிவு, அளவு, நிறம், காட்சி, கருத்து முதலிய பண்புகளை
உடையதாகியும் அவற்றிற்கு உரியதாகியும் பெயர்ச்சொல்லையும்
வினைச்சொல்லையும் போன்று தம்மை உணர்த்தியும் வேறு பொருளை
உணர்த்தியும் பெயருக்கும் வினைக்கும் முதனிலையாகவும் அவற்றின்
முன்னும் பின்னும் நின்று, அறியப்படாத சொற்களை அறியப்பட்ட
சொற்களோடு சேர்த்து உணர்த்தப்படும் தன்மையதாகியும் ஒரு சொல்லுக்கு
ஒரு பொருளும் ஒரு பொருளுக்குப் பல சொல்லும் உரியதுமாயும் வருவன
உரிச்சொல்.

செய்யுளில் இருபாலும் பொருந்தவும் குறைச்சொல்லாகவும் ஆகி
பொருள் அமைந்து இருக்கும். எல்லாச்சொல்லும் பொருள் வேறு
உடையதாகவும் ஆகும். ஒரு சொல்லுக்குரிய பொருளை மற்றொரு
சொல்லாலும் அப்பொருளினை வேறொரு சொல்லாலும் சொல்லிக் கொண்டே
சென்றால் வரம்பு இல்லாமல் மிகும்.

விளக்கம்

நனி என்ற உரிச்சொல் மிகுதிப்பொருள் உடையது. இவ்வாறு எல்லா
உரிச்சொற்கும் பொருள் உண்டு.

கறுப்பு என்ற பெயர் கறு என்ற உரிச்சொல் அடியாகப் பிறந்தது.