58. |
வாய்த்த திணை,பால், இடமே, காலம், வினாச், செப்பு, மரபும், வழாஅது ஓம்புக; வழீஇயவழியமைக்க வாய்த்த திணை, பால்களிலே ஐயவே முற்றாற் பொதுச்சொல் அறைந்திடுக; துணிவில் அன்மை மொழிக, இருதிணையில் ஏத்திறுதி கொடுபொருள் ஆறினும் ஏற்கமுடிப்பார், இழிபு, சொன் நோக்கு, உயர்பு(உ)வகை, சினம், சிறப்பு | |
ஆறினிலும் |
| |
வேய்தத்திணை பால்வழுவும் வழுவிலாந் திணைபால் விரவில் எண்,பேர், சிறப்பு, இழிபு, மிகவில்ஒரு முடிவே. | |
(5) |
| வழு, வழுவமைதி ஆகியவற்றின் பொது இலக்கணமும் திணைவழுவும் விளக்குகின்றது. உரை : ஒருசொல்லுக்கு அமைந்த 1. திணை, 2. பால், 3. இடம், 4. காலம், 5. வினா, 6. விடை, 7. மரபு ஆகிய ஏழும் வழுவாமல் பாதுகாக்க வேண்டும். ஒரோவழி வழுவிய இடத்து வழுஅமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சொல்லுக்குரிய திணைபற்றியும் பால்பற்றியும் ஐயம் ஏற்பட்டால் அவற்றிற்குரிய பொதுச்சொல்லால் கூறவேண்டும். ஐயம் ஏற்பட்டுத் திணை இன்னது, பால் இன்னது என்று துணிந்தபோது துணிந்த பொருள்மேல் அல்லாத தன்மையை வைத்துச் சொல்ல வேண்டும். உயர்திணை எழுவாயைத் தொடர்ந்த பொருள். இடம் காலம், குணம், தொழில், சினை ஆகிய அஃறிணைப்பொருள் ஆறும் உயர்திணையோடு சேர்ந்து முடிக்கின் அந்த உயர் திணை முடிபாகும். 1. பழிப்பினாலும் 2. சொல் நோக்கத்தாலும் 3. கோபத்தினாலும் 4. மேன்மையினாலும் 5. மகிழ்ச்சியினாலும் 6. சிறப்பினாலும் பாலும் திணையும் வழுவி வந்தாலும் தவறாகக் கருதப்படமாட்டாது. திணைகளும் பால்களும் கலந்து வருமானால் 1. சிறப்பினாலும் 2. இழிவினாலும் 3. மிகுதியினாலும் ஒரு முடிபின ஆகும். |