சுவாமிநாதம்137சொல்லதிகாரம்
60. அறியாத பொருளைஅறி வுறுத்தல்வினா, வதுதான்
அறியாமை ஐயம்இரண் டாம்;அறிவு கொடை,கோள்
இறும்ஏவல் நான்கும்வாய் பாட்டின்வினாஅமை வாமே;
யா, ஆர், யார், யாது, ஓ, ஏ, எவன்கொல், உருவாஞ்;
செறிவினாப்பொரு ளைஅறிவுறுப் பதுசெப்பு; அதுவே
செவ்வன்இறை இறைபயப்பாம்; அவற்றின்இறை பயப்பே
உறுவது, (உ)ற் றீரவினா, ஏவல்,மறுத் திடலே
உடன்படல், சொற்றொகுத்துஇறுத்தல் ஏழெனச் சான்றனவே
 

(7)

 

வினா, விடை ஆகியவற்றை விளக்குகிறது

உரை: அறியாத பொருளைத் தெரிவிப்பது வினா. அது
அறியாமையாலும் ஐயத்தாலும் எழும். 1. அறிபொருளும் 2. கொடுத்தலும்,
3. கொள்ளுதலும் 4. ஏவுதலும் ஆகிய நான்கு வாய்பாட்டில் வினா அமையும்.
யா, ஆர், யார், யாது, ஓ, ஏ, எவன், கொல் ஆகிய வடிவங்களில் வினா
நிகழும்.

வினாய பொருளை அறிவுறுப்பது விடை. அது 1. செவ்வன் இறை, 2.
இறை பயப்பது என இருவகைப்படும். இறைபயப்பது 1. உற்றது உரைத்தல்,
2. உறுவது கூறுதல், 3. வினா எதிர்வினவுதல், 4. ஏவுதல் 5. மறுத்தல், 6.
ஒத்துக் கொள்ளுதல், 7. சொல் தொகுத்துக் கூறுதல் என்று ஏழு வகைப்படும்.

விளக்கம் :

1 அறியாமை வினா : இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது என்று மாணாக்கன்
கேட்பது.

2 ஐய வினா : ஆணா பெண்ணா

வினா வாய்பாடு :

1. அறிவினா : இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது என்று ஆசிரியர்
கேட்பது

2 கொடை வினா : சாத்தனுக்கு ஆடை இல்லையா?

3 கோள்வினா : வணிகனிடம் பயிறு இருக்கிறதா?