சுவாமிநாதம்139சொல்லதிகாரம்

5. உடன்படல் : உண்டேன்

6. சொல் தொகுத்து உரைத்தல் : பயிறு உள்ளதா என்றால் உழுந்து உள்ளது
என்று கூறல்.

இது இலக்கண விளக்கம் 305, 308 ஆகிய சூத்திரங்களை ஒட்டியது.
(அதனோடு வினாவிற்குரிய சொல்லையும் விகுதியையும் இங்கு புதிதாகத்
தொகுத்துக் கொடுத்துள்ளார்); ஆயினும் இலக்கண விளக்கம் அறிவு,
அறியாமை முதலிய ஆறையும் ஒன்று சேர்த்துக் கூறிப் பின்னர் அறிவு,
அறியாமை தவிர ஏனைய நான்கும் முதல் இரண்டோடு ஒக்கும் என்பதால்
இவர் இரண்டாகக் கொண்டார் போலும்.

61. சான்றவர்எப் பொருளைஎவ் வாறுஉரைப்பர், அந்தபடியே
தாம்உரைத்தல் மரபாகும்; பொருள்முதல்ஆ றினையும்
ஏன்றடைசேர் மொழி,இனம்உள் ளதால்குறித்து இல்லதற்கும்
ஏற்புடைத்து, ஒரோவழியே ஈரிடத்தும் இசைப்பார்;
போன்று,இயற்கைப் பொருளினையிற் றெனச்சொல்லுஞ்;
 

செயற்கைப்

 
  பொருள்நிலை யாக்கத்து இசைப்பின், ஆக்கங்முன் காரண
முன்ஊன்றல்செயுட் காகும்;காரணம்இன்றி யாக்கத்துடன்
சொல்லும் வழி வழக்கிடத்துள் உளதுமரபடைவே. (8)

மரபு பற்றி விளக்கமும் சில மரபு முறையும் விளக்குகின்றது.

உரை : பெரியோர் எந்தப் பொருளை எப்படிப் கூறினார்களோ
அதே முறையில் தாமும் உரைத்தல் மரபு. பொருள் முதலாக ஆறனையும்
அடையாக அடுத்து வரும் மொழிகள் இனப்பொருளைச் சுட்டியும்
இனப்பொருளைச் சுட்டாமலும் ஒரோ இடத்து உலகவழக்கு, செய்யுள் ஆகிய
இரண்டு இடத்தும் கூறுவர்.

பொருளின் இயல்பான தன்மையாகக் கூறும்போது ‘இற்று’ என்ற
வாய்பாட்டால் கூறுவர். ஒரு பொருளின் செயற்கைப் பண்பைக் கூறும்போது
‘ஆகு’ என்ற சொல்லைப்