சுவாமிநாதம்141சொல்லதிகாரம்

செய்யுளில் காரணமின்றி வருதல்.

நல்லவை எல்லாந் தீயவாம், தீயவும்
நல்லவாஞ் செல்வம் செயற்கு (குறள். 375)

இங்கு ஆக்கச்சொல் (ஆம்) வந்து காரணக்கிளவி காணப்படவில்லை.

பயிர் நன்றாம் (பயிர் நன்றாக இருக்கிறது) என்று உலக வழக்கினும்
காரணக்கிளவி இல்லாமல் வரும். தொல்காப்பியமும் (22) அதையொட்டி
இலக்கண விளக்கமும் (313) காரணமின்றி ஆக்கக் கிளவி வருதல் என்று
மட்டும் சொல்லியுள்ளன. ஆனால் இவர் காரணம் முன்னும் ஆக்கம் பின்னும்
செய்யுளுக்குரித்து என்றும் காரணமின்றி வருதல் வழக்கிடத்து வரும் என்றும்
உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் பேசுவது புதுமையானது.

இது இலக்கண விளக்கம் 311, 312, 313 ஆகிய மூன்று சூத்திரத்தையும்
தழுவியது.

62. அடை,சினை,கண் முதல்ஏற்கும்; ஈரடைகண் முதலே
அடைதலுமாம்; வழக்கினுக்குச், செய்யுளுக்கு ஈரடையா;
நடைசினையிற் செறிதலும்பின் மயங்கலுநன் மரபா (ம்);
நாட்டில்இலாப் பொருள்இனைத்து என்றுஅறிபொருள் இவ்
 

விரண்டும்

 
  இடையும்வினைப் படுதொகுதிக் கட்பொருள் ஆதியினில்
எச்ச(ம்) முற்றாம், உம்மைபெறு உங்; குடி, சாதி, நிலம் பண்
புடைமை,தவம், தொழில், சிறப்புக், கல்வி, சினை பழி, ஈய்
வுரிமை; திணைப்பேர்ப் பின் இயற்பெயர் உரைப்பர்
 

பொருட்கே. (9)

 

சில மரபுகளை விளக்குகின்றது.

உரை: பண்புச்சொல்லும் வினைச்சொல்லும் முதற்சொல்லும்அதே
முறையில் தொடர்ந்துவரும். இரண்டு பண்புச்சொல் முதல் சொல்லோடு
தொடர்ந்து வருதல் வழக்கிடத்து மரபு.