‘உருபு எச்சங்கள் முற்றவாய் நிலைப்பெயரும் வினையும் உம்மை பெறும்’ என்பது ‘‘இனைத்து என்று அறிபொருள், உலகின் இலாப்பொருள்; வினைப்படு தொகுதிக் கண்ணும் பொருள் முதல்; அவற்றொடு படுத்தற்கண்ணும் முறையே; முற்றும் எச்சமும் ஆயீரும்மையும்; தெற்றெனப் பெறுதல் செவ்விது’’ என்ற இலக்கண விளக்கத்தை (315) ஒட்டியது போலக் காணப்படினும் பொருள் தெளிவாக விளங்கவில்லை. இது இலக்கண விளக்கச் சூத்திரங்கள் 321, 326, 327, 328, 329, 315, 321 என்ற வரிசையில் தழுவப்பட்டுள்ளது. நன்னூல் இதே கருத்தைக் கூறினும் 396, 353, 354, 356, 394 என்ற வரிசையை மாற்றியதாலும் குறித்தோன் கூற்றம் பற்றி நன்னூலில் சூத்திரம் இல்லாததானும் இலக்கண விளக்கத்தையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அகர, ஆகாரங்கள் ஓகாரமாக மாறுவது செய்யுளுக்கு மட்டுமே உரியதாக நன்னூலாரும் கூற இவர் செய்யுளுக்கும் வழக்குக்கும் பொதுவாகக் கூறியுள்ளார். 65. | அறை பொதுப்பேர் வினைப்பொதுவை நீக்கிட, மேல்வரும் பேரால் வினையாற் குறிப்பாற் பால்இடம்திணை காண்குறுமே. செறிவில் பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை ஆதிய பொருளின் உருபிடை நீங்குற, இரண்டு முதலாத் துறையின் மொழிதொடர்ந்து, ஒரு சொற் போன்றும் அளப்பரி தாய்த் தொகுத்தல், தொகைநிலை; விரிக்குங்காற் பிளவும்படுமே. முறைசொல் வேற்றுமை, உவமை, உம்மை, வினை, பண்பு, அன் மொழி,என வாறாந் தொகை; பின்படு தொகைவேறு ஒன்றே. (12) | திணை, பால், இடம், ஆகியவை பொதுமை நீங்கு நெறியும் தொகையின் வகையும் விளக்குகின்றது. உரை: திணை, பால், இடங்களுக்குப் பொதுவாய் நிற்கும் பெயர்ச் சொற்களும் வினைச்சொற்களும் பொதுமையை |