சுவாமிநாதம்192பொருளதிகாரம்
 

6. தலைமகள் தலைமகனை இயற்பட மொழிதல், 7. கனவில் வருந்துதலைச்
சொல்லுதல், 8. அழகு நலம் கெடுதலைச் சொல்லுதல்.

     விளக்கம் : முதற்பகுதி அகப்பொருள் 161, 162 ஆகிய இரண்டையும்
தழுவியது. 160, 161 ஆகிய சூத்திரங்களில் முறையே 12உம் 7உம் கூறிவிட்டு
162இல் 18 என்று கூறுவது வியப்பாக உள்ளது. பிற்பகுதி 163, 164.7
வரையுள்ள பகுதியின் தழுவலாகும்.

103. சொலும்இறைவற்கு இடர்கூற வேட்டல்சகி துயர்நீ
     சொல்என்றல்,அலர்அச்சம், ஆற்றச்சம் உரைத்தல்,
கலிகாம(ம்) மிக்ககழி படர்கிளவி, தன்னுட்
     கையாறுஎய் திடுகிளவி நெறி,குறியே வெறியே,
குலவுபிறர் விலக்குவித்தல்; தமரைவரைவு எதிர்வு
     கொள்வித்தல், பத்தொன்பான் வரைவுவேட் கையதாம்;
வலியபொய்த்தல், மறுத்தல்,கழ றுதல்மெய்த்தல் நான்கு
     வகையாகும் வரைவுகடா தலைஇனனங்காலே.     [19]

வரைதல் வேட்கையும் வரைவு கடாதலும் கூறுகின்றது.

     உரை: 9. தலைமகள் தன்னுடைய துன்பத்தைத் தலைவனுக்குக்
கூறும்படித் தோழியைத் தூண்டுதல், 10. தோழி உன்னுடைய துயரை நீயே
சொல் என்று தலைவிக்குக் கூறுதல், 11. ஊரார் பேச்சுக்கு (அலர்) அஞ்சுதல்,
12. தலைவன் வரும் வழி பற்றிய அச்சம் சொல்லுதல், 13. விருப்பம்
மிகுதியால் துன்பத்தைச் சொல்லுதல், 14. தான் விருப்பத்தை அடக்க முடியாத
செயலற்ற தன்மையால் தோன்றும் சொற்களைச் சொல்லுதல், 15. நெறி, 16.
குறி, 17. வெறி, ஆகியவற்றை விலக்குவித்தல், 18. பிறர் விலக்குவித்தல், 19.
உறவினரைத் திருமணம் ஏற்பாடு செய்யச் சொல்லுதல் ஆகிய பத்தொன்பதும்
திருமணம் செய்து கொள்ள விருப்பம் (வரைவு வேட்கை) கூறும் பிரிவுகளாம்.