சுவாமிநாதம்200பொருளதிகாரம்
 
7. தெய்வம் பொறுத்துக்கொள்ளாமையைச் செய்வோம் என்று கூறுதல், 8.
வீட்டிலேயே இருக்கும்படிச் செய்துள்ளதைக் கூறுதல், 9. இரவு வரும்
தலைவனைத் தாய் நேரே பார்த்ததைக் கூறல் எனத் தலைவி அறத்தொடு
நிற்றல் ஒன்பது கூற்றுக்களை உடையது. 1. வெறியை விலக்குதல், 2. தாய்
தோழியை வினவுதல், 3. தலைவிக்கு வேறுபாடு ஏற்பட்ட காரணம்
என்னவென்று கூறுதல், 4. பூ காரணமாகவோ, 5. களிறு காரணமாகவோ, 6.
நீர் காரணமாகவோ ஏற்பட்ட புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்பாள்.

     விளக்கம் : நம்பியகப்பொருள் தலைவி அறத்தொடு நிற்றலை
எழுவகைப்படுத்திக்கூற (176) இந்நூல் ஒன்பது வகையாகக் கூறியுள்ளது.
இது அகப்பொருள் 175, 176, 177 ஆகிய மூன்றையும் அடியொற்றியது.

110. அறம்உணர்தாய் செவிலையைப்பெண் வேற்றுமைவி னாதல்
     அவள்முன்னின்று உணர்த்தல்இரண் டேசெவிலி அறமாம்;
முறையின்இவை அறத்தோடு நிலைபதினே ழாகு(ம்);
     மூவெட்டுங் களவுவெளிப் படுமுன்வரை வாகும்
இறையுடன்போய்வரைதல்,மீண் டேவரைதல்,உடன்போக்கு
     இடையீடுஉற்றேவரைதல், வெளிப்படை,மூன்று அதனினம்;
இறைதவிரும் போக்கே,கற் பொடுபுணர்ந்த கவ்வை
     மீட்சிஎன வேதொகைமூன்றாம்உடன்போய் வரைவே. [26]

செவிலி அறத்தொடு நிற்றலும் உடன்போய் வரைவும் விளக்குகின்றது.

     உரை: 1. தாய் தலைவியிடம் காணப்படும் வேறுபாடு கண்டு
செவிலியை வினாவுதல், 2. செவிலி தாயின் முன்னே இருந்து நேரே கூறுதல்
என்ற இரண்டும் செவிலி அறத்தொடு