113. | தொழுசெவிலி நற்றாய்க்குச் சொல்லநற்றாய் இரங்கல், தோழியாரட் டம்அயலார் தோழியொடும் புலம்பல், அழுசகிபாற் புலம்பு(ல்)நிமித் தம்போற்றல் சுரத்தை ஆற்றுவித்தல், தன்மகள்மென் மைத்தன்மைக்கு இரங்கல் எழில் இளமைக்கு இரங்கல் அச்ச மதற்கு இரங்கல் கண்டோர் இரங்கல் ஆற்றாத் தாயைச் செவிலிதேற் றுதல்பின் னுழிநடத்தல் வழியின்முக் கோற்பகவரை வினாதல் மற்றுஏது காட்டல்எயிற் றியைவினா வுதலே. [29] | இது கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரி உணர்த்துகின்றது. உரை: 1. செவிலி தலைவியின் உடன்போக்கை நற்றாய்க்குச் சொல்ல அவள் வருந்துதல், 2. தோழி புலம்புதல், 3. அயலார் தோழியோடு வருத்தப்படுதல், 4. நற்றாய் தோழியிடம் வருத்தப்படுதல், 5. (தலைவி வரும்) அறிகுறி (நிமித்தம்) கண்டு பாராட்டுதல், 6. பாலைவனத் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதல், 7. தன் மகளுடைய மென்மைத் தன்மைக்கு இரங்குதல், 8. இளமைத் தன்மைக்கு வருந்துதல், 9. தன்மகளின் அஞ்சும் குணத்திற்கு இரங்குதல், 10. கண்டோர் இரங்குதல், 11. தலைவியின் பிரிவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அன்னையைச் செவிலி தேற்றுதல், 12. பின் செவிலி தேடிச்செல்லுதல், 13. போகும்வழியில் முக்கோற் பகவரை வினாவுதல், 14. அதற்கு அவர்கள் (செவிலி கவலைப்படாமல் இருப்பதற்குரிய) காரணத்தை எடுத்துச்சொல்லுதல், 15. செவிலி எயிற்றியை வினாவுதல். விளக்கம் : இது அகப்பொருள் 185 முதல் 188.3 வரையுள்ள பகுதியின் தழுவலாகும். 114. | வினையில்குர வொடுபுலம்பல், சுவட்டினைக்கண் டிரங்கல், மேற்கலந்து வருவோரை வினவல்,அவர் தேற்றல், அனைமகட்கா ணாதுதுன்பம் உறல்இருபத் தெட்டும் அறிந்திடுகற் பொடுபுணர்ந்த கவ்வையாம்; தெளிதல் | |