விளக்கம் : நம்பியகப்பொருள் 203 ஆம் சூத்திரத்தை அடியொற்றியது. ஆனால் நம்பியகப்பொருளில் பத்து வகைக் கிளவி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமகன் திருமணம் வரை பொறுத்திருந்ததைத் தோழி கேட்டல் என்ற ஒரு கிளவி மட்டுமே அங்கு உள்ளது. ஆனால் இந்நூலில் அதற்கு அவன் பதில் கூறுதல் என்பதும் தனித்துறையாகக் கருதப்பட அவ்வாறு நம்பியகப் பொருளில் சேர்க்கப்படவில்லை. பாட விளக்கம் : ‘இகுழை வாழ்த்தூதல்’ என்ற மூலபாடம் இகுளை வாழ்த்துதல் என்று திருத்தப்பட்டுள்ளது. 119. | மேவவேண்டு தல்,மறுத்தல், மகிழ்தல்,வினா நேர்தல், விடுத்தல்,அறு வகைப்பரத்தைப் பிரிவாகும்; அதனிற் காவலன்நீங் குழிப்புலவிக்கு இவட்குஏதுஇது என்றே கண்டோர்கூ றுதல்,தனித்த தலைவிதுனித்து இரங்கல், ஓஇதுஎன் னெனத்தோழி வினவல்,இறை புறத்தின் ஒழுக்குஇறைவி சொலல்,பாங்கி கழறுதல்,செவ் வணியைப் பாவைசே டியர்க்குஅணிதல் அணிந்துவிடல், அணியூர்ப் பார்த்துஅழுங்கல், கண்டுபரத் தையர்கள்பழித் திடலே. [35] | இது பரத்தையிற்பிரிவு உணர்த்துகின்றது. உரை: 1. பொருந்தும்படி வேண்டுதல், 2. அதற்கு மறுத்தல், 3. மகிழ்ச்சி அடைதல், 4. வினாவுதல், 5. ஒத்துக் கொள்ளுதல், 6. விடுத்தல் என ஆறுவகையை உடையது பரத்தையிற்பிரிவு, 1. தலைவன் நீங்குவதைக் கண்டோர்கள் தலைவியின் புலவிக்குக் காரணம் அதுதான் (அவன் பிரிவு) என்று கூறுதல், 2. தனித்து இருக்கும்போது தலைவனை வெறுத்து வருத்தப்படுதல், 3. வருத்தப்படுவது எதற்கு என்று தோழி விசாரித்தல், 4. தலைவனுடைய புற ஒழுக்கத்தைத் (பரத்தையிற் பிரிவு) தலைவி தோழிக்குச் சொல்லுதல், 5. தோழி பதில் சொல்லுதல், 6. செவ்வணி (பெண்கள் |