சுவாமிநாதம்227புறத்திணை மரபு
 

     பாட விளக்கம் : ‘னெடுமொழி’ (1வது வரி) என்பது மூலம். ‘குருவஞ்சி’
(2-வது வரி) என்பது மூலபாடம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை 52
-ல் குறுவஞ்சி என்று காணப்படுதலால் அவ்வாறே திருந்திக்கொள்ளப்பட்டது.

     ‘சொருதவல்’ (4-வது வரி) என்பது மூலபாடம். பெருஞ் சோற்று நிலை
என்பதற்கு இணையாக உள்ளமையால் சோறு உதவல் என்று கொள்ளப்பட்டது.

134. அதிகுழிஞை மருதத்தின் புறன்,அரண(ம்)முற் றுதலும்,
     அரண்காப்பும், எனஇரண்டாம்,அவற்றுஅரண்முற் றுதலே,
முதல்,உழிஞை சூடல்,குடை நாட்கோள்,வா ணாட்கோள்
     முரசுழிஞை, மதில்கொளக்கோன் எழுந்தகொற்ற வுழிஞை,
மதுகையொடு வேந்துறலின் அரண்எய்தும் என்றல்
     நமன்கண்ணன் எனச்சொல்லுங் கந்தழி உழிஞைப்,
புதுமைபுகழ் முற்றுழிஞை எவர்க்கும்பூ விருப்பாய்ப்
     புகறல்,மதிற் புறத்துஇருத்தல் மதினிலைக் கோடச்
                                     சொலலே.    [6]

உழிஞைத் திணைக்குரிய துறைகளை இதுவும் அடுத்த இரண்டு
சூத்திரமும் கூறுகின்றது.

     உரை: உழிஞை என்ற புறத்திணை மருதம் என்ற அகத் திணையின்
புறனாகும். பகைவேந்தர் அரணைப் படையெடுத்துச் செல்லும் அரசன்
முற்றுகையிடுதலும் அங்கு இருக்கும் அரசன் காத்தலும் என இருவகைப்படும்.
1. அரணை முற்றுகையிடுதல், 2. உழிஞை மாலையை அணிந்து கொள்ளுதல்
3. அரசன் குடையைப் புறவீடு விடுதல், 4. வாளைப் புறவீடு விடுதல், 5.
முரசின் நிலைமையைக் கூறுதல், 6. பகைவர் நாட்டு மதிலைக் கைப்பற்ற
அரசன் வீரரோடு செல்லும் கொற்ற உழிஞை, 7. மன எழுச்சியுடன் அரசன்
வருதலால் அரண் கைப்பற்றப்படும் என்றல் (அரச உழிஞை), 8. வீரத்தோடு
போரிட்டு அரணைக் கைப்பற்றும் தன்னுடைய அரசனைத் திருமால் என்று
புகழ்ந்து