சுவாமிநாதம்24எழுத்ததிகாரம்

மீனாட்சி சுந்தரனார் போன்றோர் ஆய்தம் என்பது ‘உரசொலி’ என்ற பொது
ஒலியைக் குறிக்கலாம் என்று கருதுகின்றனர்.

மகரக் குறுக்கமும் ஆய்தத்தின் பிறப்பும் இலக்கண விளக்கத்தை
ஒட்டிக் கூறியுள்ளார். ணகர, னகர ஈற்றுச் சொல் கீழ்வரும் மகரமும் (உண்ம்,
தின்ம்) குறுகுவதால் ‘லளத்திரிந்தனணப்பின்.......மகரம் குறுகும்’, என்பது
குன்றக் கூறலாகவே அமையும்.

19. ஆயுமொன்றெல்லாமும் அப்பான் முன்னுருவாம். உயிர்
வேறாகின் மேற்கீழ்விலங்கு தீர்க்கங்கொண்டி ரட்டாய்க்
காயம் வெவ்வேறாகும்; உயிர் அளவு அளவாம். உயிர்பின்
காட்டும், உடல் முன்காட்டும் இவை உயிர்மெய்யாமே.
ஏய இசை கெடின் மொழிக்கு முன்பின் இடைஉயிர்க்
குற்றொற்று நெடிநீளும் ஐயௌவ் விவ்வுவ் வேற்றுஉயிரிற்
கூய் அளவாம்; ஆய்தம் வ ய ல ள ங ஞ ண ந ம ன
 

குறிற்கீழாய்

 
  இடைகடை யொற்றெற்றிடும் ஒற்றளபே. (7)

உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபெடை என்ற மூன்று
சார்பெழுத்துக்களை இது விளக்குகின்றது.

உரை : எல்லா மெய்யெழுத்துக்களும் அகரத்தொடு கூடிய வழி
முன்னைய வடிவே உடையன. ஏனைய உயிரெழுத்துக்களோடு கூடிய வழி
மேல் விலங்கு, கீழ் விலங்கு தீர்க்கம் முதலிய கொண்டு வடிவம் வேறு
உடையதாக அமையும். உயிர்மெய்யின் மாத்திரை அதிலுள்ள உயிரின்
மாத்திரையேயாம்; மெய் முன்னும் உயிர் பின்னும் உடையது. இசை
குறைந்தால் மொழிக்கு முன்னும் பின்னும் இடையும் குற்றெழுத்தை ஏற்று
நெடிலும் நீண்டு வரும். ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும்
வரும்.

குறில் கீழ் வருகின்ற ஆய்தம், வ ய ல ள ங ஞ ண ந ம ன ஆகிய
பதினொன்றும் மொழிக்கு இடையிலும் இறுதியிலும் நீண்டால்
ஒற்றளபெடையாம்.