162. | செய்யுள்முடிவு இரண்டா(ம்),முத் தகம்குளகம் என;ஓர் செய்யுளின்முத் தகம்இறும்;பல பாட்டின்இறுங் குளகம்; எய்துஇரண்டால் தொகைநிலையாய்த் தொடர்நிலையாய்ச் செய்யுள் இரண்டணிக்காம், அவற்றினிலே தொகைஒருவன் உரையும், ஐயர்பல்லோர் உரையும்,இடம், தொழில்,காலம்,பொருள் பாட்டு அளவு,பிற வாலும்பே ரிட்டுமுடிப் பனவாம்; துய்யபொருட் டொடர்நிலை,சொற் றொடர்நிலை,என் றிரண்டாம் தொடர்நிலை;சொற் றொடர்நிலைஅந் தாதிஅடுத் ததுவே. [1] | இது செய்யுளின் வகையும் விரியும் கூறுகின்றது. உரை : முத்தகம், குளகம் என்று செய்யுள் இரண்டு வகைப்படும். அவற்றுள் முத்தகம் என்பது ஒரு பாட்டால் முடியும். பல பாட்டுக்களால் முடிவது குளகம். மேலும் தொகைநிலைச்செய்யுள், தொடர்நிலைச்செய்யுள் என இரண்டும் கூட அணி உணரப்பயன்படும். தொகைநிலைச்செய்யுள் என்பது ஒருவரால் இயற்றப்பட்ட பல பாட்டுக்களும் பலரால் இயற்றப்பட்ட பல பாட்டுக்களும் இடம், தொழில், காலம், பொருள், பாட்டின் வகை, அளவு ஆகிய பிறவற்றின் அடிப்படையில் |