169. | பத்துவெண்பாப் பத்துஅகவல் பாடலும்,பின் கலிப்பாப் பத்துஉறலும், பின்வஞ்சி பத்துஉறலும், அடைவே நத்துஇரட்டை மணிக்கோவை;மும்மணியிற் கோவை நன்மணிக்கோ வையும்அவைநேர் கலப்பது அந்தாதி யுமாம்; ஒத்தவெள்ளை கலித்துறையும், பின்அகவ லும்பின் னுறும்அகவல் விருத்தமும்,சேர்த்து அடைவின் மாலையுமாம் எத்திறத்தும் இனம்பாவின(ம்) மாறியைம்பான் கவிதை இயம்புவதே அலங்கார பஞ்சமம்என் றாரே. [8] | இரட்டை மணிக்கோவை, மும்மணிக்கோவை, நான்மணிக்கோவை, மாலை, அலங்கார பஞ்சமம் ஆகியவற்றின் இலக்கணம் கூறுகின்றது. உரை : பத்துவெண்பாவும் பத்து ஆசிரியப்பாவும் கலந்து பாடுவது இரட்டை மணிக்கோவை. பத்துவெண்பாவும், பத்து ஆசிரியப்பாவும், பத்துக் கலிப்பாவும் சேர்த்துப் பாடுவது மும்மணிக்கோவை. பத்து வெண்பாவும், பத்து ஆசிரியப்பாவும், பத்துக்கலிப்பாவும் பத்துவஞ்சிப்பாவும் கலந்து பாடுவது நான்மணிக்கோவை. இந்த மூன்றும் அந்தாதித் தொடையில் பாடப்பெறும். வெண்கலித்துறையும் ஆசிரியப்பாவும் ஆசிரியவிருத்தமும் சேர்ந்து முறையாக வருவது மாலை. எந்த வகையாலும் எந்த இனத்தாலும் மாறி மாறி ஐந்து வகையான (நேரிசை வெண்பாவும், கலித்துறையும் ஆசிரியப்பாவும், ஆசிரிய விருத்தமும் வகுப்பும் ஆகிய) கவிதையும் சேர்ந்து வருவது அலங்கார பஞ்சமம் ஆகும். விளக்கம் : இது வெண்பாப் பாட்டியல் செய்யுளியல் 16, 17, 22 ஆகியவற்றைத் தழுவியது. 170. | ஆர்ந்தவெள்ளை கலித்துறையே! விருத்தமுந்தான் தனியே அந்தாதித் திடில்அப்பே ரந்தாதி; நூறு சார்ந்துபப்பத் தோர்இசையாம் பதின்பத்துஅந் தாதி; தகும்கலிப்பா வெள்ளைகலித் துறைபாடிப் பின்னர்த் | |