சுவாமிநாதம்283அணியதிகாரம்
 

இடத்தில் நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள்தருவது தீபகஅணி.
முன்னும், பின்னும், நடுவிலும் வந்த சொல்லாவது பொருளாவது பின்னர்ப்
பல இடத்திலும் வருவது பின்னிலை அணி. ஒருவகையாக நின்ற தொடர் பல
பொருளைத் தருவது சிலேடை அணி. இது, செஞ்சொல் சிலேடை (ஒரு
வகையாக நின்று பல பொருள்படுவது); பிரிசொல் சிலேடை (ஒரு வகையாக
நின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்திப் பல பொருளாகக்
கொள்வது); ஒரு வினைச் சிலேடை (ஒரு வினைச்சொல்லால் வருவது);
பலவினைச் சிலேடை (பல வினைச்சொல் பற்றி வருவது); முரண்வினைச்
சிலேடை (மாறுபட்ட வினைச்சொல்லால் வருவது); பின்னியமச் சிலேடை
(சிலேடையாகக் கூறியவற்றை ஒன்றற்கு நிச்சயமாக்குவது). அநியமச் சிலேடை
(சிலேடையாகக் கூறியவற்றை நிச்சயம் செய்து அதை விலக்குதல்); விரோதச்
சிலேடை (முன்னர் சிலேடையாகக் கூறியதைப் பின்னர் மாறுபட்ட
(விரோதத்தில்) சிலேடையாகக் கூறுவது), அவிரோதச் சிலேடை (முன்னர்
சிலேடையாகக் கூறிய பொருளைப் பின்னர் மாறுபடாமல் கூறுவது) ஆகிய
பலவகைப்படும். வினை (தொழில்) யாலும், பண்பாலும், வேறுபடும் இரண்டு
பொருளுக்கு ஒன்றே பொருந்தும்படி உடனிலையாகக் கூறுவது புணர்நிலை
அணி.

     விளக்கம் : தண்டியலங்காரம் 40, 42, 76, 77, 78, 86 ஆகிய
சூத்திரங்களைத் தழுவியது. சிலேடையைச் செம்மொழி, பிரிமொழி என்று
இருவகையாக (தண்டி 76) முதலில் பிரித்து அடுத்து ஒருவினைச் சிலேடை என்று ஏழாகப்பிரித்துத் (77) தண்டியலங்காரம் கூறும்.

191. நிலைபெறமுன் முயன்றதொழிற் பயன்பின்வே றொன்று
     நிகழ்முடிப்ப துசமாயு தம்;விபாவ னைதான்
உலகறிகா ரணமொழித்தொன் றுரைப்புழிக்கா ரணம்வே
     றொன்றுஇயல்பிற் குறிப்பில்வெளிப் படுத்தலாம்;
                                    தனைத்தான்