சுவாமிநாதம்290அணியதிகாரம்
 
197. எழும்பரிக்கால் முதல்பேதஞ் சதுரங்கம், நால்,ஆறு,
     எட்டாரஞ் சக்கரம்,ஓர் கவிக்கோர்கவி சொல்லின்
அழுந்தாமல் எழுத்தெடுத்தல் கரந்துறையும் செய்யுள்,
     அன்றிஓர்பாட்டு எவ்வெட்டுஎழுத் தாய்நால்வரி இட்டு
ஒழுங்குகீழ்மேல் மேல்கீழ்புறம் புறம்பார்க்கி னும்பாட்
     டொத்தல்சுழி குளம்;பினடி எழுத்துஏனை யடியின்
விழுந்தடங்கள் கூடச்சதுக் கம்பாட்டுஒன்று இறுதி
     மேலாய்ஒன் றிடைவிடவே றாங்காதை கரப்பே.    [4]

சதுரங்கம், சக்கரம், கரந்துறை, கூடச்சதுக்கம், காதைகரப்பு
ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : பரிக்காலில் வேறுபாடு முதலில் வேறுபாடு இருப்பது சதுரங்கம்.
நாலாரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம் என்று மூன்று
வகைப்படும் சக்கரம்.

     ஒரு செய்யுளில் பிறிது செய்யுளினுடைய சொற்களின் எழுத்துக்கள்
பொறுக்கி எடுத்துக் கொள்ளும்படி பாடுவது கரந்துறையும் செய்யுள். ஒரு
செய்யுளை வரிக்கு எட்டு எழுத்துக்களை உடைய நான்கு வரி எழுதி
முதல் வரிசையிலுள்ள எழுத்துக்களை மேலேயிருந்து கீழேயும் கடைசி
வரிசையிலுள்ள எழுத்துக்களை கீழே இருந்து மேலேயும் படித்து மேலும்
இரண்டாம் வரிசையை மேலே இருந்து கீழேயும் கடைசிக்கு அடுத்த
வரிசையைக் கீழே இருந்து மேலேயும் படித்து, தொடர்ந்து இவ்வாறு
படித்துக் கொண்டு வந்தால் அந்த வரி நான்கும் ஏற்பட்டு அதே
செய்யுளாகவே முற்றுப் பெறுவது சுழிகுளம். இறுதி அடியிலுள்ள
எழுத்துக்களை ஏனைய மூன்று அடியுள்ளும் மறைந்து நிற்கும்படி பாடுவது
கூடச்சதுக்கம்.

     ஒரு செய்யுள் முடிய எழுதி அதன் இறுதிச்சொல்லின் முன்னர் உள்ள
சொல்லின் முதலெழுத்துத் தொடங்கி