சுவாமிநாதம்57எழுத்ததிகாரம்
 
30. அணவுவலி வரின்மகரம் அவற்றுஇன வொற்றாதல்
     ஆய்தம்உறல்; வம் முதலின் முதனீண்டு ஒற்றுறலே.
னண முன்(ந்) தற்றவாய் நன்னணவாய்ப் பின்றிரிவே
     ஞமவரவே லளனணவாய்க் கசபவரற் றடவாய்த்
தணினணமுன் கசபவரற் றடவாய்முன் றிரிவே
     தகரம்னண முன்னும் லள முனும்இயைந்தே டறவாய்த்
திணிநகரம் லளமுன்னியைந் தேனணவாய் இருசொற்
     றிரிதல்மப் பாலவமதா னிலையுவ்வை யுறலே    (3)

புணர்ச்சியைத் தொகுத்து உரைக்கின்றது.

     உரை : 19. மகர ஈற்றுச்சொல் முன் வல்லெழுத்து முதன்மொழி
வந்தால் அவற்று இன ஒற்றாகத் திரியும். 20. ஆய்தம் வரும். 21. வகர
முதன்மொழி புணரும் போது முதல் நீண்டு மெய் பொருந்தும். 22. னகர,
ணகர முன் தகரம் வந்தால் முறையே றகர டகரமாகவும் 23. நகர முதன்
மொழி வந்தால் ன, ணவாகவும், 24. லகர, ளகர முன் ஞகர மகரங்கள்
வந்தால் னகர, ணகரம் ஆகவும் மாறும். 25. க, ச, ப வந்தால் றகரமாகவும்,
டகரமாகவும் மாறும். 26. தகரம் ண, ன முன் முறையே டகர றகரமாகவும்,
ல,ள முன் முறையே டகர றகரமாகவும் திரியும், 27. நகர முதன்மொழியான
வருமொழியொடு லகர, ளகர இறுதியாக உடைய நிலைமொழி சேர்ந்தால் ன,
ண வாக நிலைமொழியும் வருமொழியும் மாறும்.

     விளக்கம் : 19. இவ்விதி அல்வழிக்கே பொருந்தும்.

மரம் + குறிது = மரங்குறிது
மரம் + சிறிது = மரஞ்சிறிது 
மரம் + தீது = மரந்தீது
மகரம் இன ஒற்றாகத் திரிதல்.

20. முள் + தீது = முஃடீது - ஆய்தம் வருதல்

21. விளக்கம் தெரியவில்லை.

22. மகன் + தகுதி   = மகன்றகுதி - னகரம் முன் தகரம் வரல்;
   ஆண் + தன்மை = ஆண்டன்மை - ணகரம் முன் தகரம் வரல்.