ஏனையவற்றின் இலக்கணமும் மாறுபடுவன என்ற உண்மையை வலியுறுத்தும். எனவே தான் வழக்கு, செய்யுள் என இருவகையாக இலக்கண ஆசிரியர்கள் பிரிப்பர். இவர் அம்மரபையொட்டி அந்த இரண்டைக் கூறினும் நூலுள் இந்த வேறுபாட்டைக் குறிப்பிடத் தவறி விட்டார். இது இலக்கண விளக்கம் 160, 162, 163, 164 ஆம் சூத்திரங்களை ஒட்டி அமைந்திருப்பினும் அஃறிணைக்குரிய விளக்கம் நன்னூல் 261 ஐ ஒட்டி அமைந்துள்ளது. ‘மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை’ என்பது நன்னூல் தொடர் (261). 35. |
அன்னதெய்வம் பேடுஈறின் முடிவதாந்திணை ஈற்று ஐம்பாலின் வகுத்திடுவர்; மூன்றுஇடமே தன்மை முன்னிலையும் படர்க்கையுமாம்; அவற்றுள்ளே படர்க்கை முற்றுவினை பெயர்குறிப்பாற் றிணைபால் விளக்குஞ்; சொன்னதின்மற் றுஈரிடமும் திணைபாலின் இடத்தே சொற்குறிப்பாற் பெயர்வினையால் ஒருமைபன்மை | |
விளக்கு(ம்). |
| |
முன்னும்விர வுத்திணையாய் இருதிணையும் வினையால் உரைத்தகுறிப் பால்உணர்தற்கு ஒக்கும்இலக் கணமே. (2) | திணை-பால்களுக்குப் புறனடை கூறுகின்றது. உரை : தெய்வம், பேடு என்பனவற்றையும் ஐம்பாலுள் அடக்கி வினைமுற்று விகுதியால் விளக்குவர். தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவே மூன்று இடம். இவற்றில் படர்க்கை வினைமுற்றும் வினைப் பெயரும் குறிப்பால் திணையையும் பாலையையும் விளக்கும். ஏனைய தன்மை, முன்னிலை, இடப்பெயர்களும் வினைகளும் ஒருமை பன்மையை மட்டுமே விளக்கும். விரவுப் பெயர்களின் திணையையும் பாலையும் அவை ஏற்கும் வினையே குறிப்பாக உணர்த்தும். விளக்கம் : சிவன் வந்தான் - ஆண்பால்;தேவி வந்தாள் - பெண்பால்; இவை தெய்வப் பெயர்கள்; பேடி வந்தாள் பேடு வந்தது - பேடு என்பது இருதிணை வினையும் பெற்றன. |