சுவாமிநாதம்9நூல் வழி
 

     நன்னூலாரும் இலக்கண விளக்கத்தாரும் கூறாத ‘தன் காதலன்’
என்பானும் பதிகம் சொல்லுதற்கு உரியவராகக் குறிப்பிடுகிறார் இந்நூலார்.
தன்காதலன் - தன்மகன்.

     இந்தச் சூத்திரம் நன்னூல் 47, 48, 51, 52, 53, 54 ஆகிய சூத்திரங்களை
அடியொற்றியது.

9. மறுத்தல்,உடன் படல்,பிறர்நூற் புரையுரைத்தல், இருவர்
     மற்றொருபால் துணிவு,பிறர் மதங்கொண்டு நீக்கல்,
திறத்தொடுசொற் றவைநிறுத்தல், பிறர்மதந்தீர்த் தேதன்
     திறம்கொளலஏ ழுமதங்கள்; அறம்ஆதி பயன்குற்றங்
குறைத்தன்,மிகை மயக்கல்,வழூஉப், பயனிலி,மா று,அகன்று
     குறுகல்,புன ருத்த(ம்)மற் றொன்றுரைத்தல் வெளிற்றுரை யாம்
முறைச்சுருக்கல், விளக்கல்,உதா ரணமிசைநற் பொருள்நன்
     மொழியின் இனம் முறையாழ மயங்காமை குணமே. (8)

மதம், பயன், குற்றம், குணம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : 1) பிறர் கருத்தை மறுத்தல், 2) ஒத்துக் கொள்ளுதல், 3)
பிறருடைய நூலிலுள்ள குற்றத்தை எடுத்துக் கூறுதல், 4) இருவரால்
மாறுபாடாகக் கொள்ளப்பட்ட இரண்டினுள் ஒரு கருத்தைச் சரியெனக்
கொள்ளுதல், 5) பிறர் கருத்திற்கு உடன்பட்டுப் பின்பு மறுத்தல், 6) தானே
ஒரு பொருளை எடுத்து நாட்டி அதனை வரும் இடந்தோறும் நிறுத்துதல்,
7) பிறர் கருத்தை ஒத்துக் கொள்ளாது தன்னுடைய கருத்தையே கொள்ளுதல்
என மதங்கள் ஏழு.

     நூலின் பயன் அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

     1. குறைவுபடச் சொல்லுதல் 2. மிகைப்படுத்திச் சொல்லுதல் 3. மயங்க
வைத்தல் 4. குற்றமுடைய சொற்களைச் சேர்த்தல் 5. பயனில்லாத
சொற்களைச்சேர்த்தல் 6. முன்பின் மாறுபாடு தோன்றக் கூறுதல் 7. செல்லச்