45. |
ஏட்டின்விளி ஒழிந்தனமுன் னுரைத்ததுஅல் லாற்பிறவும் ஏற்கும்,ஓர் உருபுஏற்பது உருபுபல வினுமே ஒட்டும்அவை இரண்டுநான்கு ஏற்பதுஉருபு அனைத்தும் உறு(ம்); மூன்றை ஏற்பனநான்கு ஐந்துஆறை எற்கும்; பட்டஐந்தை ஏற்பனநான் குஇரண்டு ஏற் கும்;ஆறு ஏற்பனநான் குஐந்து ஏழு உறும்;ஏழ்எற் பதுநான்கு | |
இரண்டும்; |
| |
தட்டிகும்ஓர் பொருட்பல்உருபு உறல்;பொருள்வே றாதல்; தம் பொருள்ஈய்ந்து அயல்விரும்பன் மூன்றின்முடித் | |
தனரே. (18) |
| இது வேற்றுமை மயக்கம் விளக்குகின்றது. உரை : மேலே கூறப்பட்ட உருபுகள் அல்லாது பிற உருபுகளையும் எட்டாம் வேற்றுமையான விளி வேற்றுமை தவிர ஏனைய வேற்றுமைகள் ஏற்கும். இரண்டாம் வேற்றுமையும் நான்காம் வேற்றுமையும், ஏற்பன பிற வேற்றுமை உருபுகளையும் ஏற்கும் மூன்றாம் வேற்றுமை நான்கு, ஐந்து, ஆறு ஆகிய வேற்றுமை உருபுகளையும் ஏற்கும். ஐந்தாம் வேற்றுமை நான்கு, இரண்டு ஆகிய வேற்றுமை உருபுகளையும் ஏற்கும். ஆறாம் வேற்றுமை நான்கு, ஐந்து, ஏழு ஆகிய வேற்றுமை உருபுகளையும், ஏழாம் வேற்றுமை நான்கு, இரண்டாம் வேற்றுமை உருபுகளையும் ஏற்று வரும். ஒரு பொருளை உணர்த்தப் பல வேற்றுமை உருபுகளையும் பயன்படுத்தல், வேற்றுமைக்குரிய பொருள் வேறுபடுதல், வேற்றுமை தன் பொருளை விட்டு விட்டுப் பிறவேற்றுமையின் பொருளை ஏற்றுவரல் ஆகிய மூன்று பண்புகளையும் கொண்டது. இரண்டாம் வேற்றுமை எல்லா வேற்றுமை உருபு ஏற்று வருதல். முதல்: சோறு சுடப்பட்டது. (செயப்பாட்டு வினையாக்கத்தில்தான் செயப்படுபொருள் முதல் வேற்றுமையில் வரும்.) அரிசியாற் சோறு ஆக்குகிறான் என்பதை இரண்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை உருபில் வந்ததற்கு |