லென்பது அதிகரித்த பொருளன்றிப் பிறபொருளுங்கூறல். சந்தவின்பந் தழுவுதலின்மை யென்பது எடுத்த யாப்பிற்கிணங்குமோசையின்றிக் கூறுதல். எதிர்மறுத்துணர்த்தலென்பது எதிர்மறுத்துணர்த்தலுங் குற்றமாமென்றவாறு. அஃதாவது பாவஞ்செய்தானிரயம்புகுமெனக் கருதிக்கூறுவான் தவஞ்செய்தான் சுவர்க்கம்புகுமென்றல். இவ்வாறு கூறிற் சுவர்க்கம் புகுமென்னும் பொருடோன்றி நிரயம்புகுமென்னும் பொருடோன்றாமையிற் குற்றமாயிற்று. என்னை? “எதிர்மறுத்துண ரினித்திறத்தவுமவையே” என்னுமரபியற் சூத்திரத்தானுணர்க. (23) 24. | அழகெனத்தகுவதரிறபநாடி னகலாநடைத்தாயாழமது டைத்தாய்ப் பொருள்புலப்பாட்டிற்பொருணலன்சொன்னல னோசையினிமையோடூதியம்பயத்த லுலகமலையாமையுதாரணம்புணர்த்த னவிறொறும்புதுவதுவாய்நயனளிப்பதி னீரைந்தாமெனவியம்பினர்புலவர். |
(எ-ன்) ஈரைந்தழகுமுணர்-ற்று. (இ-ள்) நூலுக்கழகெனும்படிக்குத் தகுவது குற்றமற வாராயிற் சூத்திரஞ்சில்வகையெழுத்தாற்செறிந் திறப்பவகலாதநடைத்தா யாழ்ந்த பொருளுடைத்தா யிலக்கணவான்களுக்குப் பொருள் புலப்படுவதாய்ப் பொருணலனுஞ் சொன்னலனு மோசையினிமையுமுடைத்தாய்க் கற்றோர்க்குப் பயன்றருவதா யுலகத்தோடு மாறுபடுதலின்றி யுதாரணம் புணர்ப்பதாய்க் கற்குந்தொறும் புதுவதா யின்பமளிப்பதோடு மீரைந்தென்று கூறினர் புலவரென்றவாறு. (24) 25. | உள்ளுறுத்தமைத்தவுத்திவகையுணர்த்தி னுள்ளியதுணர்த்தலுரைமுறைவைப்பே தொகைபெறநாட்டல்வகைபெறக்காட்டல் விரிந்தவையிவையெனவிழுமிதிற்கூட்டல் தொகுத்தமொழியின்வகுத்தனகோடன் முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றே |
|