பக்கம் எண் :

100மாறனலங்காரம்

தனமின்றெனினுலகத்தெவர்தனியின்பமது றுவார்
       தாமென்றபினளகத்துறுதனிவண்டொடுநின்பான்
மனமொன்றியபெடையேவலியுளதென்றனரன்றே
       மறையென்றதையுணராதவென்மனதேகொடியதுவே.
(105)

என்பது, தோழீஇ! வெகுளியென்பதை மனத்தினாலுங் குறித்தறியாத சுத்தசாத்துவிககுணனுடையோர் வாழ்த்துங் காரிமாறப்பிரான், செஞ்சொலாகிய தமிழ்மறையைப்பாடிய செல்வத்தையுடையோன் குருகைமா நகரினிடத்து நம்மிறைவர் பொருண்மேற்பிரியுமுன்னர் இருவர்க்கும் புணர்ச்சிமேற்சென்ற வுள்ளத்தின்பினதளவும் யாக்கையின்களிப்பு மேகாந்தமு மிடையாமமும் ஒன்றாகப் பொருந்திய வியல்பான் மலராலலங்கரிக்கப்பட்ட அமளியிடத்து முடுகிய பரிசத்தோடு நலம்பாராட்ட லென்னு முரைபோற் பிரிதனிமித்தமென்பதாக, என்னோடுந் ‘திருவே ! மகளிரிடத்துத் தனமென்பன வில்லையாகி னுலகத்துள்ள வாடவருள் யாவர்தா மொப்பற்ற வின்பத்தை யெய்துமவர்க’ ளென்றன ரதன்பின்ன ரளகத் தரும்பவிழ்ந்தகாலைத் தேனையுண்ணவந் ததனிடத்துறைவதாந் தனிச்சுரும்போடும் நினதிடத் தொருமனப்பட்ட பெடையே மனவலியுடைய தென்றனரன்றே; அவையிரண்டையும் மிக்க தொனியென் றுட்கொளாத வெனது மனதே கொடியதென்றவாறு.

இது பாஞ்சாலவுதாரம். என்னை? தனமென்ப திரட்டுறமொழிதலாய் நடுவணை யெய்தாதவர்க் கிருதலையுமெய்தா; பொருள்வயிற்போக வேண்டு மென்பதனை யுணர்த்தியதாகவும், நின்பான் மனமொன்றிய பெடையே வலியுளதென்றதனால் நீவைத்து நீங்கியபெடை நின்னையின்றி யாற்றாமையாற் றானிறக்கி னீயு மிறப்பையென்று நினதுயிரைப் போற்றித் தனதுயிரைப் பிடித்திருந்த மனவலியுடைத் தென்பதா யது போலத் தாம்பிரிந்தகாலத் தியானு மாற்றாமையா லிறவாது தம் முயிரையும் போற்றி இல்லறங்காத்திருத்தல்வேண்டுமென்பதூஉ முணர்த்தியதாகக் குறிப்பினாற் பிறபொருள் கொள்ளக்கிடந்தமையா னென்றறிக. இதனுள் அளவும் என்னு மும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க. தோழீஇ என்னு முன்னிலைப்பெயரு மெஞ்சிநின்றதுங் காண்க. பகுதி - பொருள்வயிற்பிரிதல். துறை -