வாழ்நாளுட் டன்னால், லீலைக்காக அமைத்த வவையனைத்து மழிந்துந் தானழியா தேகோதகத்தின்மே லோராலிளந்தளிரு ளடங்கும் பச்சைக்குழவியாகியும் பல்லாயிரகோடி யண்டமாகியவற்றை யகத்திட்டு மறித்தும் புறத்திட்டுக் காவல்பூண்டு விளையாடு மகடிதகெடா சாமர்த்திய குணங்களு ளொருகுணமுமின்றி யிருவினைத் தளைப்பட்டு மல மூத்திராதிகளாலாய பாண்டத்தோடு மிறந்தும் பிறந்து முழலு முத்தியறியா மூடராகி நரம்பிரமமென்றே நாக்குத் தடுமாறாது நவிலு மொரு சார்பாரும், கற்றறி நூல் பல கற்றனராகித் தத்துவமுணர்ந்தும் பற்றறச் சாலோகமுதலிய மூன்று மெய்தி யிருவராயிருந் தீறில்பேரின்ப மொருவராமெனத் துய்க்குஞ் சுகரநந்தத்தைக் கெடுத்துக் கூடாததனைக் கூடுவதாக்கிச் சூனியப்படுத்தி மன்னுயிர் பிரமத்தோடு மொன்றாமென்று நாயனடிமைத்திறம் நழுவிய மூடரா மொருசார்பாரும், ஆதியு மந்தமு மருமறை யரியென வோதிய பொருளுரைக் குடையதை யறிந்தும் அகிலாண்டகோடி பிரமாண்டநாயகனென முத்திதருவதாம் பிரமம் சீமந் நாராயணனோவென்றையுறு முழுமூடரும் ஒருநான்மறைத்துணி வோதாதுணர்ந்த நாவீறுடையபிரான்கூறிய திருவாய்மொழியைக்கற் றுண்மைப்பொருளுணரா மூவகைமூட ரென்றவாறு. ஆரணத்தின்வழிவந்த நூலாதலாற் றிருவாய்மொழிக் காரணப்பா வென்ப தாகுபெயர். அல்லதூஉந் தமிழ்வேதமென்றும் அதற்குப் பெயர். ஆரணப்பாக் கற்றுணராதா ரெனவே யதனைக் கற்றுணர்ந்தா ரவைகூறாரென்னுங் கூற்று மெஞ்சிநிற்பதூஉங் காண்க. இங்ஙனங் கூறிய மூன்றும் வேதத்தின்வழிவந்த திருவாய்மொழியாகிய பனுவற்றுணிவன் றென்பதூஉம் அதனைக் குரவரா லுணர்ந்தோர்மதமும் அம் மூன்றினையுந் தள்ளின மதமே யென்னுமவையுங் குறிப்பெச்சம். இக் கூற்றுங் குறிப்பும் புலவனாலறியலாம். இங்ஙனமாகிய சொன்னடை கொண்டு வேறுபொருடோன்றலா லிதுவுங் கௌடவுதாரம். திணை - வாகை. துறை - சால்புமுல்லை. சினமென்பதையறியாதவர்தினமும்புகழ்மாறன் செஞ்சொற்றமிழ்மறைபாடியசெல்வன்குருகையுளார் முனமன்பினதளவொன்றியமுறையான்மலரணைமேன் முடுகும்பரிசமொடிங்கிதமொழியென்பதுபெறவே |
|