பக்கம் எண் :

பொதுவியலுரை101

தலைவி தலைவனை யியற்படமொழிதல். இவற்றை மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பாருமுளர். அவை பொருந்தாவென வுணர்க. உதாரம் முற்றும்.

மன்னிலங்கைமூதூர்வழியோதிறந்ததொன்னார்
பொன்னகர்செல்வாயிற்புதவன்றோ--தென்னரங்கன்
மைந்நீரசெம்பவளவால்வளையவண்டரள
முந்நீரணைகட்டுமுன்.
(106)

என்பது, அழகிய திருவரங்கத்தையுடைய மாயோன் கடலைக் கரை கட்டின முற்காலத்து இராவணனாகிய நிருதர்கோன திலங்கையாகிய பழையநகர்க்குச் செல்லும் வழியோ திறந்தது? தென்னரங்கேசனது பாணத்தா லிறந்த சத்துருக்களாகிய அரக்கர்செல்லும் வீரசொர்க்க வாயிலின்கட் கதவல்லவோ திறந்த தென்றவாறு.

எனவே வழியுங் கதவுந் திறந்த தென்பதாம். மைந்நீர செம்பவள வால்வளைய வண்டாள முந்நீரை யெனக் கூட்டுக இது வைதருப்பவலி. என்னை? இருளி னீர்மையுடைத்தாய்ச் சிவந்த பவளத்தைப் பெற்ற வெளுத்த வளையைப்பெற்ற அதனிடமாக வளவியதரளத்தைப் பெற்ற முந்நீரை யூடறுத்துக் கடலை யணைகட்டின முற்காலத்தெனவே வேற்றுமைத்தொகை இருபெயரொட்டுப்பண்புத்தொகை வினைத்தொகைகளை முன்னிட்டுப் பெயருடைமைப்பொருளாய்நின்று கருகும்நீர்மை யுடையநீரையெனப் பெயர்மே லேறியவிடத்து மிப்பொருளையுடையதாயிருந்த திப்பொரு ளென்னுமிடத்து மிடைநின்ற வுடைமைவினைக் குறிப்புங் காலம்பெற்ற வினைக்குறிப்புமாகிய சொற்க ளிடையிடை பல விடத்துந் தொக்கதோடும் பிறசொற்களுந் தொகைமிக்கு விரிதலானும் எனக்கொள்க. திணை - உழிஞை. துறை - புறத்திறை.

வன்கேழற்பன்றியாய்வான்பிறைக்கோட்டாழ்புனலாழ்
கொன்கேழ்கிளர்தாழ்குழல்களிப்ப--முன்கொணர்ந்த
வெம்பிரான்சங்காழியேந்தினானெவ்வுளார்
தம்பிரான்றாளேசரண்.
(107)

என்பது, வலியகேழலாகிய பன்றியாய் வானின்கட் பிறைபோன்ற கோட்டாலே யாழ்ந்த புனலின்கட் டாழ்ந்த நிறங்கிளருந் தாழ்ந்த குழலினையுடைய பூமிதேவியானவ ளுள்ளங்களிப்ப முன்னாட் புறத்தே