திணை - பொதுவியல். துறை - பனுவல்வாழ்த்து. இவையிரண்டும் உய்த்தலில்பொருண்மை. இவை மூன்றுநெறியார்க்குமொக்கும். உய்த்தலில்பொருண்மை முற்றும். கூண்டுகுமுதமலர்சிரிக்கக்கோகனக மீண்டிதழ்ச்செங்கைகுவிக்குமெல்லிதா--னீண்டுகமா மென்றாலிறையரங்கத்தேந்தல்பொருட்கேக லொன்றாலுமாகாதுனக்கு. | (115) |
சிரித்தல் - மலர்தல். ஏந்தல் அண்மைவிளி. இதனுள், சிரிக்க வெனவும் கைகுவிக்கவெனவு முக்கியப்பொருளாகிய வாயினதுகிரியையும், கையினதுகிரியையும் ஒப்புடைப்பொருளாகிய குமுதத்தினுங் கமலத்தினும் புணர்த்துரைத்தமையாற் சமாதி யெனக்கொள்க. பகுதி- பொருள்வயிற்பிரிதல். துறை - செலவழுங்குவித்தல். ஆரப்பொழிற்கோங்கரும்புதினமாக வாரைப்பொருதெழுந்தவண்மைசேர்--பேரைக் குழைக்காதரென்றொருகாற்கூறாதோவென்றிக் கழைக்கார்முகன்காகளம். | (116) |
இது சிலேடைவாய்பாட்டால் வந்த சமாதி. சந்தனப்பொழிலகத்துநின்ற கோங்கரும்பு வைகலும் மேகத்தினிடத் துண்டாகிய தண்ணீரைத் துழாயெழும் எனவும், ஆகத்தினிடத்துக் கட்டின கச்சினைப் பொருதெழு மெனவும் முலையினது கிரியையைக் கோங்கினதரும்பிடத்துப் புணர்த்தவாறு காண்க. மாகம், ஆகம் எனப் பிரிமொழிச்சிலேடையும், வாரையெனச் செம்மொழிச் சிலேடையுங் கொள்க. இவை மூன்றுநெறியார்க்கு மொக்கும். சமாதி முற்றும். ஆக இன்பமுதற் சமாதியீறாகக் குணவலங்காரம் பத்தும் அடைவே வந்தவாறு காண்க. திணை - பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை - குயிலொடுவெறுத்துக்கூறல். (20) 85. | செய்யுட்குணங்களொழிவறவேசெப்புவதும் பொய்யில்புலமையுறாப்புன்கவியேற்--கெய்துமதோ சொற்றவற்றாற்சொல்லாதவற்றினையுஞ்சொல்லியவா முற்றுவித்தல்கற்றோர்முறை. |
(எ-ன்) சொல்லிய குணவலங்காரங்கட் கொழி புணர்-ற்று. |