பக்கம் எண் :

பொதுவியலுரை105

(இ-ள்) செய்யுட்களின் குணவலங்காரங்களை யொழிவற முற்ற வுணர்த்துவதும் பொய்யென்பதில்லாத அறிவின்றன்மைபொருந்தாத புன்சொற்கவியேற்கு மெளிதா யெய்தப்பெறுந்தன்மைத்தொன்றோ? ஆகையா லிங்ஙனஞ் சொல்லப்படுங் குணங்களோடுஞ் சொல்லாதொழிந்த வக்குணங்களையுஞ் சொல்லியனவாக முற்றுவித்தல் கற்றுணர்ந்த சான்றோர்கட னென்றவாறு.

இங்ஙனம் கூறவேண்டும்நோக்கம் யாதோவெனின், செறிவென்று சொல்லப்படுவதும் எழுத்துச் செறிவும் சொற்செறிவும் பொருட் செறிவுஞ் செறிந்து வேறுவேறு ஒலித்துநடக்கும் என்று கூறியவற்றுள் எழுத்துச் செறிவும் வண்ணமு மூன்றுநெறியார்க்கும் வேறுவேறாக்கி, யொருவகைச் சொற்செறிவு மவையல்லாத பொருட்செறிவு மூன்றுநெறி யார்க்கும் பொதுவாகக் கூறினாரெனினும் மெய்க ளுடனிலைமயக்கமின்றி யேனைமயக்கமாக வண்ணமும் பொதுவாவனவு முள. அது வருமாறு :-

மயர்வறமதிநலனருளியநறைகமழ்மலர்மகள்புணர்பவன்மே
லுயர்வறவுயர்நலனெனமுதிர்தமிழ்மறையுரைமகிழ்முனிவரைவாழ்
புயல்புரைகுழன்மதிபுரைநுதல்வடவரைபுரைபுணரிளமுலைசேர்
கயல்புரைவிழியெனதுயிரெவணினதுயிர்கவல்வகையெவன்மயிலே.
(117)

இது அராகந்தொடுத்த அடியோடும் பிறிதடியும்படத் தொடர்ந் தோடினமையான் முடுகுவண்ணம் ; “முடுகுவண்ண, மடியிறந்தோடிய வதனோரற்றே” என்றாராகலின். இவ்வண்ணமு மூன்றுநெறியார்க்கும் ஒக்கும். ஒழிந்தனவற்றுள்ளு மிவ்வண்ணம் பாகுபடுமென்னு நோக்கத்தாற் கூறப்பட்டது. அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். பகுதி - உடன்போக்கு. துறை - செவிலிதேடல்.

(21)

பொதுவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.