இரண்டாவது பொருளணியிய லுரை. ------ 86. | பொருளினுஞ்சொல்லினும்புனையுறுசெய்யுட் கணிபெறப்புணர்த்தலினணியெனும்பெயர்த்தே. |
என்பது சூத்திரம். இவ்வோத் தென்னுதலிற்றோவெனின், ஒத்த நுதலியதூஉ மோத்தினதுபெயருரைப்பவே விளங்கும். ஆயின் இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின்? பொருளணியிய லென்னும் பெயர்த்து ; பொருளானா மணிக ளுணர்த்தினமையின். ஆயின், இதன்றலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்? சொல்வான் றொடங்கிய அணி யென்பவற்றிற்குக் காரண மிவையென்பதூஉம் அவை செய்யுட் கின்ன சிறப்புடைத்தாகப் புணர்த்தலி னிப்பெயர்த்தாயிற் றென்பதூஉ முணர்-ற்று. (இ-ள்) புலவராற் றொடுக்கப்பட்ட கவிகட்குப் பொருளானுஞ் சொல்லானும் அழகெய்தப் புணர்ப்பதால் அணியென்னும் பெயரை யுடைத்தாயிற் றிவ்வலங்காரமென்றவாறு. புலவரா லென்பதூஉம் அலங்கார மென்பதூஉஞ் சொல்லெச்சம் அணி யிரண்டனுண் முன்னையது அழகாம். பின்னையது பூணாம். எனவே பொருளானுஞ் சொல்லானு மணி யிரண்டென்பதாயிற்று. (1) 87. | அவற்றுள், புவனம்போற்றியபொருளணிபுகலிற் றவலரும்பான்மைத்தன்மையுவமை யுருவகமுள்ளுறையொட்டுல்லேக மொப்புமைக்கூட்டம்வேற்றுமைதிட்டாந்தந் தற்குணம்பிரத்தியனீகஞ்சந்தய மற்புதநிதரிசனந்தற்குறிப்பதிசயஞ் சிலேடைபின்வருநிலைதீபகநிரனிறை பூட்டுவிலிறைச்சிப்பொருள்கோள்பொருண்மொழி |
|