பக்கம் எண் :

பொருளணியியலுரை107

யதிகம்வகைமுதலடுக்கிணையெதுகை
விரோதமுபாயம்விசேடஞ்சமாயித
மேதுச்சுவைபரியாயமிலேசந்
தற்பவமசங்கதிதடுமாறுத்தி
புணர்நிலைவேற்றுப்பொருள்வைப்புவிபாவனை
யார்வமொழிநெடுமொழிபரிவருத்தனை
காரணமாலைகாரியமாலை
யேகாவலிபிரதீபம்பிறவணி
முன்னவிலக்கபநுதிநிந்தாத்துதி
புகழ்வதினிகழ்தன்மாறுபடுபுகழ்நிலை
பரிசங்கைகாவியலிங்கம்பரிகர
முறுசுவைவிநோத்திசமுச்சயமுதாத்த
மாசிசங்கரஞ்சங்கீரணமே
பாவிகமெனவறுபானான்காகும்.

(எ-ன்) வைத்தமுறையானே பொருளானா மணிகளது பெயருமுறையுந் தொகையு முணர்-ற்று.

(இ-ள்) அங்ஙன மிரண்டுகூற்றவாகிய அணிகளுள் உயர்ந்தோர் முதலெனப் போற்றப்பட்ட பொருளணியொன்றனையுங் கூறுமிடத்துத் தன்மைமுதலாகப் பாவிகமீறாக அறுபத்துநான்கா மென்றவாறு.

இவற்றிற்கெல்லா மெண்ணும்மை தொக்குநின்றன. என என்பது எண்ணிடைச்சொல் ; என்னை? “என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனால். எனவென்ப தனைத் தன்மைமுதலாக வெண்ணிய வெங்கு மொட்டுக.

அஃதாக ; இச்சூத்திரத்துள் சிலேடை, பின்வருநிலை, தீபகம், நிரனிறைமுதலிய சொல்லானாமணிகளு மிதனுட்கூறாநிற்பப் பொருளணியிய லென்ப தென்னையெனின், மிகுதி பொருண்மேலவாதலின் மிக்கவற்றாற் பெயர்கொடுத்தார்; அஃ தியாவதுபோலவெனின், அங்கராகமாகிய சந்தனத்துடன் குங்கும கற்பூர கத்தூரி கூடினும் பூசியது சந்தனமென்பதுபோலக் கொள்க.

அற்றேல் இவை முறையாயினவாறென்னையோவெனின், இயல்பு விகாரமென விரண்டாகிய வவற்றுள், தன்மை யியல்பாகலான் முற்பட்ட