முறைமைத்தாக வைக்கப்பட்டது. உவமையை மூன்றுறுப்படக்கிய பிண்டமாகுந் தொல்காப்பியத்து ளிறுதிநின்ற பொருளகத் தகப்பட்டதாக அலங்காரத்தினையுங் கூறிய ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரு முவமையென்ப தொன்றாகத் தொகைபெற்று வினைமுதலிய நான்காய் வகுத்துப் பலவேறு விரிவாய்நின்று விகாரமாயதன்றிப் பிறவலங் காரங்கட்கு முபகாரமுடைத்தாகலானு மஃதொன்றினையுமே முக்கியமாக்கி யதனுட னுருவகமும் உள்ளுறையுவமமும் வகுத்துக்கூறிய முதன்மையானும், இதற்குத் தனியே முதனூல்செய்த தெண்டி யாசிரியரும் அவர்நோக்கமே தாமு முடம்பட்டாராகத் தன்மையின்பின் னுவமையை வைத்தாராகலானும், இருவர்நோக்கமு முட்கொண் டிந் நூலுடையா ரவையிரண்டிற்கு மிந்நூல் வழிநூலாகலானுந் தன்மையை முதல்வைத் ததன்பின்ன ருவமையையு முதல்வைத்தது முறையெனக் கொள்க. உருவகமும், உவமையும் பொருளும் வேறுபட்டு நில்லா தொன்றென்னும் பான்மைத்தாய மாட்டேற்று முவமையாதலானும் உள்ளுறை யுவமமும் இசைதிரிந் திசைக்கப்படுவதா யுவமையோ டுவமிக்கப்படும்பொருள் பிறிதோராறு தாராது அவ்வந்நிலங்களிற் பிறந்த கருப்பொருளோடுஞ் சார்த்தி யுள்ளுறுத்திக்கொள்ளுமுவமை யாதலானும் அவை முறையே வைக்கப்பட்டன. ஒழிந்த ஒட்டு உல்லேக முதலியனவு முவமையைப் பின்சென்றிருத்தலா னவை வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க. அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். உவமையைப் பின்சென்றனவல்லாத அலங்காரங்களையுந் தமக்குப் பொருந்தினமுறையே வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க. அவையு மீண்டுரைப்பிற் பெருகும். அஃதாக ; ஆனா லிந்நூலுடையார் முதனூல்களிற் கூறியபடியே வழிநூலிற் சிறிது புடைநூலிலக்கணந் தவறாது கூறப்புகுந்து மிகவுமிதன் முதனூலாகிய தண்டி கூறிய அணிகளுள் நுட்பமென்னும் அலங்காரத்தைக் குறைத்துப் பிற முதனூலணிகள் கூறிய அணிகளையுந் திரட்டிக்கூறி, முந்து நூல்களுட் கூறாத பூட்டுவில் இறைச்சிப்பொருள் கோள் பொருண்மொழி யென்னுமூன்றினோடும் வகைமுதலடுக்கு இணையெதுகை உபாயம் உறுசுவை புகழ்வதினிகழ்த லென்னும் அலங்காரங்களையுங் கூட்டி அறுபத்துநாலாக மிகுத்ததூஉ மொருவழிக் குன்றக் |