கூறன் மிகைபடக்கூற லென்னுங் குற்றமாம்பிறவெனின், ஆகாது ; என்னை? நுட்பமென்பது பரிகரத்து ளடங்குமெனக் குறைத்துச் செய்யுட் கணிபெறப் புணர்ப்பதெல்லா மணியெனப்படுதலான் முன்னைய மூன்றுஞ் சொல்லிலக்கணத்தினும் பொருளியலினும் புறத்திணையினுங் கூறியபடியே செய்யுட்கழகாதலி னணியிற்கூட்டி மிகுத்தார் ; ஏனைய வைந்து மழகெய்துவதா யிலக்கியங்கண்டதற் கிலக்கண மியம்பியதாக்கி மிகுத்தாராகலானென்றுணர்க. அன்றியும், வழிநூலும் புடைநூலுஞ் செய்தற்கேதுத் தொகுத்தன்முதலிய நான்கினுள்ளு முதலன விரண்டு மிகவு மேதுவாகலானுங் கூறப்பட்டன. அற்றேல் ஐயமுந் தெரிதரு தேற்றமும் பொதுநீங்குவமையுந் தெண்டியாசிரிய ருவமவிரியுட் புணர்க்க, அவற்றை யேனையாசிரியர் வேறுவேறணியாகப் புணர்க்க, இந்நூலுடையார் முதலிரண்டும் பிறர்நோக்கத்தோடுங் கூட்டிப் பிறிதோ ரணியாக்கிப் பின்னையது தெண்டிநோக்கத்தோடுங் கூட்டிப் புணர்த்ததூஉங் குற்றமாமெனின், குற்றமன்று. இருவர்க்கும் முதலான தொல்காப்பியனார் “தடுமாறுவமங் கடிவரையின்றே” யென வழுவமைதிவாய் பாட்டாற்கூறினமையானும் அவற்றுள் உவமவுருபு புணராமையானு முவமையைப் பின்சென்ற பிறிதோரணியாகப் பிறருடம்பட்டது தானுடம்படுதல் என்னுமுத்தியா னுடம்பட்டும், ஏனையது “தானே தனக்குவமைதா” னென உவமவாசகம் புணர்ந்தமையானும் “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்றாராதலானும் பிறர்மதங்களைதலென்னு முத்தியானுங் கூறப்பட்டது. இங்ஙனம் பெயரு முறையுந் தொகையுமாகிய அணிகளை முதனூலாசிரியர் வகைப்படுத்தியும் விரித்துங் கூறிய நோக்கத்தோடுஞ் சிலவற்றை யிந்நூலுடையார் தன்கோட்கூறலென்னு முத்தியானுந் தன்குறியிடுதலென்னு முத்தியானும் வகுத்ததன்மேல் விரித்துவகுத்தும் விரித்ததன்மேல் விரித்ததையும் அவ்வணிகட் குணர்த்தும் பீடிகைமுதலாய வுரைநடைநோக்கங்களா னாங்காங்குக் கண்டுகொள்க. அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். (2) 88. | வழுவாமரபினெப்பொருளையும்விகாரந் தழுவாநடைபெறப்புணர்ப்பதுதன்மை. |
(எ-ன்) மேனிறுத்தமுறையானே தன்மையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்-ற்று. |