பக்கம் எண் :

110மாறனலங்காரம்

(இ-ள்) இருதிணையுட்குற்றமில்லாத இலக்கணத்தையுடைய எவ் வகைப்பட்ட பொருள்களையு முவமை முதலிய விகாரவணிகள்கூடாதே சுபாவநடைபெறப் புலவன் பாடுவது தன்மையென்னு மலங்காரமா மென்றவாறு.

நடை - ஒழுக்கம். குற்றமில்லாத எவ்வகைப்பட்ட பொருளையு மெனவே குற்றமுள்ளவற்றின் சுபாவத்தைப் பாடுவதுந் தன்மையா மெனினும் அலங்காரத்தின்பாற்கூடாதென்பதாம். வழுவாதமரபென்னும் வினையெதிர் மறுத்தபெயரெச்சவாய்பாடு செய்யுள்விகாரத்தாற் றொக்கீற்றுயிர்மெய் கோவாமுத்தமென்பதுபோலக் குறைந்துநின்றது. தழுவா வென்பது மது. விகாரம் ஆகுபெயர்.

(3)

89. அதுவே,
ஒண்பொருண்மக்களுயிருளவஃறிணை
சினைவினைபண்பிடமெனவுஞ்சிவணும்.

(எ-ன்) தன்மையின் சிறப்பிலக்கணப்பாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அத் தன்மையென்னுமணி, உயர்திணையிடத்துப்பொருட் டன்மையும் மக்கட்டன்மையும், அஃறிணையிடத் துயிருள்ள அஃறிணைத் தன்மையும், உயிரில்லாத அஃறிணைத்தன்மையும் அப்பொருளின் சினைத்தன்மையும், வினைத்தன்மையும், பண்புத்தன்மையும், இடத்தன்மையுமெனத் தனித்தனி புலப்படப் பொருந்துமென்றவாறு.

அதுவே, என்பது “சீர்கூனாதல் நேரடிக்குரித்தே” யென்பதனாற் சீர்கூனாயிற்று. இவற்றிற்கெல்லா மெண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குவிரிந்தன. உயிரில்லாஃறிணை யென்பது முயர்திணையென்பது மெதிர்மறையெச்சமாகி விரிந்தன. இன்னு மவ்விலேசானே யுயிருள வஃறிணையு ளியங்குதிணையும் உயிரில்லவற்றுட் கருத்துப்பொருளுங் கொள்க.

(4)

90. அவற்றுள்,
பொருளியல்பாண்பெண்ணெனவிருபுலப்படும்.

(எ-ன்) இதுவும் பொருட்டன்மைக்கோர் பகுதியுணர்-ற்று.