பக்கம் எண் :

பொருளணியியலுரை111

(இ-ள்) அச் சொல்லப்பட்ட வுயர்திணை யஃறிணையுட் பொருட் டன்மை ஆடூஉப்பொருட்டன்மை மகடூஉப்பொருட்டன்மை என விரு வகைத்தாய்த்தோற்றுமென்றவாறு.

(5)

91. அரும்பெறன்மக்கட்டன்மையுமற்றே.

(எ-ன்) இதுவும் உயர்திணைக்கண் மக்கட்டன்மைக்கோர் கூறுபா டுணர்-ற்று.

(இ-ள்) பெறுதற்கரிய மக்கட்டன்மையும் பொருட்டன்மைபோல விருவகைப்படு மென்றவாறு.

அற்று உவமவுருபு. அஃறிணைக் கொருமை பன்மை யென்பதல்லாது ஆண்பெண் ணென்பது சிறப்பின்மையாற் கூறாராயினார் ; என்னை? “ஆண்பெண்பலரெனமுப்பாற்றுயர்திணை”, “ஒன்றேபலவென்றிருபாற் றஃறிணை ” யென்பதனா லறிக.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

செம்பொனாடைசெறிதிருமருங்கின
னம்புயத்தனிமலரலர்ந்தவுந்தியன்
கவுத்துவக்கடவுட்கவினிழன்முழுமணி
பவித்திரத்திருமகள்பதிந்தமார்பினன்
வலம்பயின்முப்புரிநூலொடும்வாடா
திலங்கியவனமாலிகைபுனையிணைப்புய
னிகல்புரிதிகிரிசங்கேந்தியகரத்தினன்
கதிர்மணிமௌலிகவித்தசேகரன்
மதிதவழ்சோலைமலையலங்காரன்
பூதலந்தாயபொன்னடி
காதலித்தவர்வல்வினைகடந்தவரே.
(118)

இது ஆடூப்பொருட்டன்மை. திணை - பாடாண். துறை - கடவுள் வாழ்த்து உரையிற்கோடலென்பதனா லுரையெழுத வேண்டுவதில்லை. பா - நேரிசையாசிரியப்பா.

கனையிருள்கடிவயிரப்பரல்செறிதமனியப்
புனைகழலொடுவனைபரிபுரப்பூந்தாளினன்