பக்கம் எண் :

112மாறனலங்காரம்

குறங்கிணையொடுமருங்கினைவளைபொலந்துகிலின
னறந்தழைதருமயன்றனையருளலருந்தியன்
கவுத்துவமணிவனமாலிகைகலந்தொளிர்திருப்
பவித்திரமுடன்மலர்மாமகள்பயின்மார்பினன்
வான்றோய்கதிரினிற்றிகிரியைவலனேந்தியு
மீன்றோய்மதியினில்வரிவளையிடனேந்தியு
மகரக்குழைதழைகாதினன்மணிமௌலியன்
சிகரப்பலதலைசேர்திருமலைமேலுறை
செல்வனை,
மனமொழிமெய்களின்வழிபடுபவராய்ப்
புனநறுமலர்பொழிபவர்பாற்
கனவிலுமுறான்கொடுங்கணிச்சியோனே.
(119)

கனையிருள் - செறிந்தவிருள். வயிரப்பரல் - வயிரமணி ; உள்ளீடாய தரி. தமனியப்புனைகழல் - பொன்னாற்புனையப்படும் வீரக்கழல். பூந்தா ளென்றது பொலிவினையுடைய சீபாதம். வான்றோய்கதிர்... ஏந்தியும் - வானிடத் தலமரல்பொருந்திய கதிராற்கொண்ட சக்கரத்தை வலத்தே தரித்தும், மீன்றோய்..... இடனேந்தியும் - நாண்மீனோடு பொருந்திய மதியாற்கொண்ட வலம்புரியை யிடத்தே பொறுத்து மென்க. என்னை? வான்றோய் கதிர்போன்ற திகிரியை, மீன்றோய் மதிபோன்ற வலம்புரியை யென வுவமைத்தொகைத்தொடர்மொழியன்றோவெனின், அன்று ; “இமையாதமுக்கண், மூவரிற் பெற்றவ” ரென்பது போலக் கொள்க. ஈரிடத்தும் இன் சரியை. ஆல் என்னு முருபு இல்லென மூன்றாவ தைந்தனுருபாய் மயங்கின. கொண்ட வென்னும் வினையுந் தொக்கது. செல்வனை யென்பது தனிச்சொல். சீபாத முதலியவற்றை யுடையனாகித் திருமலைமே னிலைபெற்ற திருவுடையானைத் திரிவித கரணங்களாலும் அருச்சனைசெய்பவராய்க் கைகளா னறுமலர்தூயவரிடத்துக் காலன் நனவினுங் கனவினு மணுகானென்றவாறு. இது பத்தடியாய்ச் செல்வனை யென்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற சிந்தடிவஞ்சிப்பா. அலங்காரமுந் திணையுந் துறையு மிதுவு மது.